This Article is From Apr 30, 2020

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 33,000ஐ தாண்டியது; 1,074 பேர் உயிரிழப்பு!

Coronavirus: இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு இதுவரை 1,074 பேர் உயிரிழந்துள்ளனர். 8,325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 33,000ஐ தாண்டியது; 1,074 பேர் உயிரிழப்பு!

Coronavirus: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 33,000ஐ தாண்டியது.

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 33,000ஐ தாண்டியது.
  • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,718 பேர் கொரோனாவால் பாதிப்பு
  • இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு இதுவரை 1,074 பேர் உயிரிழந்துள்ளனர்.
New Delhi:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 33,050ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,718 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 67 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு இதுவரை 1,074 பேர் உயிரிழந்துள்ளனர். 8,325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொடர்ந்து, மக்கள் அனைவரும் ஊரடங்கை தளர்த்துவது குறித்து அரசின் முடிவை எதிர்பார்த்து உள்ளனர். நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு முடிவடைவதை தொடர்ந்து, மே.4ம் தேதி முதல் கொரோனாவை எதிர்கொள்வதற்கான புதிய விதிமுறைகளில் பல மாவட்டங்களுக்கு கட்டுபாடு தளர்வுகள் இருக்கும் என உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் உயர்ந்து வருவதால், நாட்டின் சில பகுதிகளில் மே.3ம் தேதிக்கு பின்னரும் ஊரடங்கு தொடரக்கூடும், என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொரோனா ஹாட்ஸ்பாட்கள் அல்லது சிவப்பு மண்டலங்கள் என குறிப்பிடப்பட்ட 170 மாவட்டங்கள் தற்போது 129ஆக குறைந்துள்ளது. ஆனால், அதே நேரத்தில் தொற்றுநோய் பாதிப்பு இல்லாத மாவட்டங்கள் அல்லது பச்சை மண்டலங்களாக இருந்த பகுதிகளும் 325ல் இருந்து, 307ஆக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த காலக்கட்டத்தில், ஹாட்ஸ்பாட்கள் அல்லாத மாவட்டங்களும், ஆரஞ்சு மண்டலம் என்று குறிப்பிடப்பட்ட பகுதிகளும் 207ல் இருந்து 297 ஆக அதிகரித்துள்ளது. 

ஊரடங்கை கட்டுபாடுகளை தளர்த்துவது குறித்த இறுதி முடிவை பிரதமர் நரேந்திர மோடி தான் எடுப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கொரோனா அறிகுறி இல்லாத, வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பலாம் என மத்திய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. 

அரசியல் பின்னடைவு குறித்த கவலைகள் காரணமாகவே வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர் செல்ல அனுமதியளித்து மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக என்டிடிவிக்கு தகவல்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் அக்கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் இடையே நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே, மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தை அனுமதிக்காமல் இருந்த மத்திய அரசு அதன் முடிவை தளர்த்தியது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

.