Read in English
This Article is From Apr 23, 2020

மும்பையில் 4,000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு!

மும்பை பெருநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 4,025 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் மேலும் 522 பேர் புதியதாகப் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Advertisement
இந்தியா Posted by
Mumbai:

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,700 ஆக அதிகரித்திருக்கக்கூடிய நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதல் இடத்திலிருந்து வருகிறது. இம்மாநிலத்தில் 23-04-2020 மாலை 6 மணி நிலவரப்படி 6427 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதே தேதியில் மட்டும் மாநிலம் முழுவதும் 778 பேர் புதியதாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மும்பை பெருநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 4,025 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் மேலும் 522 பேர் புதியதாகப் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைவாழ் பகுதியாக இருக்கக்கூடிய மும்பையின் தாராவி பகுதியில் ஏறத்தாழ 8 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மிக நெருக்கமான பகுதியான இங்கு 214 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

தாராவி பகுதியை கொரோனா தொற்று பரவலின் மையமாக(hotspots) மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மும்பை பெரு நகராட்சியானது தொற்று பரவியுள்ள இடங்களை 813 கட்டுப்பாட்டு மண்டலங்களாகப் பிரித்துள்ளதாக அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 840 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
Advertisement
Advertisement