This Article is From May 17, 2020

பீகார் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் சண்டை! அடிப்படை வசதிகள் போதிய அளவு இல்லையென புகார்!!

தனிமைப்படுத்தப்பட்டுள்ள 150 பேர் திடீரென சண்டையிடும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. பள்ளியின் மைதானத்தில் கூடிய அவர்கள் தனிமனித இடைவெளியினை கடைப்பிடிக்காமல் சண்டையிடத் தொடங்கியுள்ளனர்

தண்ணீர் லாரி வந்தவுடன் சண்டை தொடங்கியது.

Samastipur, Bihar:

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 90 ஆயிரத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில், பீகார் மாநிலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அம்மாநிலத்தில் ஏறத்தாழ 3.5 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், மாநில தலைநகர் பாட்னாவிலிருந்து 120 கி.மீ தூரத்தில் உள்ள சமஸ்திபூர் மாவட்டத்தின் புல்ஹாரா நகரில் உள்ள ஒரு பள்ளியில் 150 பேர் அரசால் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள 150 பேர் திடீரென சண்டையிடும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. பள்ளியின் மைதானத்தில் கூடிய அவர்கள் தனிமனித இடைவெளியினை கடைப்பிடிக்காமல் சண்டையிடத் தொடங்கியுள்ளனர். இந்த தனிமைப்படுத்தல் முகாமில் தண்ணீர் பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் தண்ணீர் கொண்டு வந்த பின்னர்  அங்கிருக்கும் மக்கள் வாளியை கொண்டு தாக்கிக்கொள்வதும், தண்ணீர் பிடிக்க சண்டையிடும் காட்சிகளும் வீடியோக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த முகாமில் நீடிக்கக்கூடிய தண்ணீர் பிரச்சனை, மோசமான உணவு குறித்து பலமுறை புகார் செய்துள்ளதாக முகாம் வாசிகள் தெரிவிக்கின்றனர்.

புனேவில், கடந்த மாதம், 70 வயதான கொரோனா நோயாளி ஒருவர் தனிமைப்படுத்தப்பட்ட முகாமிலிருந்து தப்பி 17 கி.மீ தொலைவில் உள்ள தனது வீட்டினை அடைந்துள்ளார். தனிமைப்படுத்துதல் முகாம்களில் சுகாதாரமான உணவு மற்றும் அடிப்படைவசதிகள் மோசமாக உள்ளதாக அவர் குற்றம்சாட்டியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.

அதேபோல உத்தரப்பிரதேசத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் நிலை குறித்த வீடியோன ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் அந்த முகாமில் உள்ள மோசமான நிலைமைகளைக் காணமுடிந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அங்கு பணிபுரிந்த மருத்துவர்களை மாநில அரசு வேறு இடங்களுக்கு மாற்றி உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

.