This Article is From Jul 29, 2020

4 கோடி முகக்கவசங்கள், மருத்துவ கண்ணாடிகள்: கட்டுப்பாடு இல்லாத ஏற்றுமதிக்கு அனுமதி!

இது தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களின் ஒரு பகுதியாக இருக்கும் மற்ற அனைத்து பொருட்களும் தடைசெய்யப்பட்டுள்ளன.

Advertisement
இந்தியா
New Delhi:

50 லட்சம் யூனிட் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை மாதந்தோறும் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்த சில வாரங்களுக்குப் பிறகு, ஒவ்வொரு மாதமும் நான்கு கோடி அறுவை சிகிச்சை முகக்கசங்கள் மற்றும் 20 லட்சம் மருத்துவக் கண்ணாடிகளையும் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, பிரதமர் மோடியின் ஆத்மனிர்பர் பாரத்தின் மந்திரத்தைத் தொடர்ந்து, மேக் இன் இந்தியா மற்றும் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் முடிவில், அரசு ஒவ்வொரு மாதமும் 4 கோடி அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் மற்றும் 20 லட்சம் மருத்துவ கண்ணாடிகளை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளது, அதோடு முழு முகக்கவசங்களையும் தடை இல்லாமல் ஏற்றுமதி செய்கிறது, "என்று அவர் தெரிவித்துள்ளார். 

வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT),மாதம் 50 லட்சம் யூனிட் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி ஒதுக்கீட்டில், 20 லட்சம் மருத்துவ கண்ணாடிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது. 

இது தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களின் ஒரு பகுதியாக இருக்கும் மற்ற அனைத்து பொருட்களும் தடைவிதிக்கப்பட்டுள்ளன.

Advertisement

இந்த பொருட்களில் மருத்துவ கண்ணாடிகள், மருத்துவமற்ற/அறுவைசிகிச்சை தவிர மற்ற அனைத்து முகக்கவசங்களும் (பருத்தி, பட்டு, கம்பளி, பாலிஸ்டர், நைலான் ரேயான், விஸ்கோஸ் - பின்னப்பட்ட, நெய்த அல்லது கலக்கப்பட்டவை); நைட்ரைல் கையுறைகள் மற்றும் முகம் கவசம் உள்ளிட்டவை அடங்கும்.

Advertisement