This Article is From Mar 24, 2020

“நமக்கு நேரமிருந்தது, ஆனாலும்…”- கொரோனா நெருக்கடியால் பொங்கிய ராகுல்!

Rahul Gandhi: பிப்ரவரி மாதம் முதலே ராகுல் காந்தி, கொரோனா வைரஸை எதிர்கொள்ள மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ட்விட்டர் மூலம் வலியுறுத்தி வந்தார். 

“நமக்கு நேரமிருந்தது, ஆனாலும்…”- கொரோனா நெருக்கடியால் பொங்கிய ராகுல்!

Coronavirus: காங்கிரஸ் கட்சி, ‘ராகுல் காந்தி, மத்திய அரசை கொரோனா அச்சுறுத்தல் குறித்து பிப்ரவரி 12 ஆம் தேதியே எச்சரித்தார். ஆனால் அவரின் பேச்சை மத்திய அரசு மதிக்கவில்லை’ என்று குற்றம் சாட்டியுள்ளது.

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் 9 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்
  • தமிழகத்தில் 15 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது
  • இன்று மட்டும் சென்னையைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது
New Delhi:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ராகுல் காந்தி, நாடு தற்போது இருக்கும் நிலையைப் பார்த்து வருத்தமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். 

இது குறித்து அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கு வருத்தமாக உள்ளது. காரணம், இது முழுவதுமாக தவிர்க்கப்பட்டிருக்க முடியும். இதற்குத் தயாராக நமக்கு காலம் இருந்தது. நமக்கு வந்த அச்சுறுத்தலை மிகவும் முக்கியமானதாக எடுத்து, நன்றாக தயாராகி இருக்க வேண்டும்,” எனக் கருத்திட்டுள்ளார். 

இந்தியளவில், தற்போது சுமார் 500 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் உள்ள 32 மாநிலங்கள் முழு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளன. மாநில மற்றும் மத்திய அரசுகளும் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. 
 

முன்னதாக அரியானாவைச் சேர்ந்த மருத்துவரான காம்னா காக்கர், “அவர்கள் வரும்போது, என் சுடுகாட்டுக்கு மாஸ்க்குகளையும் கை உரைகளையும் அனுப்புங்கள். கைத்தட்டல்களையும் தட்டுகளையும் அங்கே அனுப்புங்கள். மிகவும் கடுப்புடன் ஒரு அரசு மருத்துவர்,” என்று கூறி பிரதமர் மோடியை ட்விட்டரில் டேக்  செய்து பதிவிட்டிருந்தார். மருத்தவர் காக்கரின் பதிவை ரீ-ட்விட் செய்துதான் ராகுல், மத்திய அரசை விமர்சித்திருந்தார். 

காங்கிரஸ் கட்சி, ‘ராகுல் காந்தி, மத்திய அரசை கொரோனா அச்சுறுத்தல் குறித்து பிப்ரவரி 12 ஆம் தேதியே எச்சரித்தார். ஆனால் அவரின் பேச்சை மத்திய அரசு மதிக்கவில்லை' என்று குற்றம் சாட்டியுள்ளது. வென்டிலேட்டர்கள் மற்றும் சர்ஜிக்கல் முகமூடிக்களை ஏற்றுமதி செய்ய அரசு மிகத் தாமதமாகத்தான் தடை விதித்தது என்றும் இது மிகப் பெரும் தவறு என்றும் ராகுல், காட்டமாக விமர்சித்துள்ளார். 

கொரோனா பரவல் மிக அதிகமானதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 19 ஆம் தேதிதான் மத்திய அரசு, வென்டிலேட்டர்கள், சர்ஜிக்கல் மாஸ்க்குகள், மாஸ்க் செய்யும் துணிகள் உள்ளிட்டவைகளை ஏற்றுமதி செய்யத் தடை விதித்தது. 

பிப்ரவரி மாதம் முதலே ராகுல் காந்தி, கொரோனா வைரஸை எதிர்கொள்ள மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ட்விட்டர் மூலம் வலியுறுத்தி வந்தார். 

காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ராகுல் காந்தியின் தாயுமான சோனியா காந்தி, நாட்டில் இருக்கும் அமைப்புசாரா மற்றும் கட்டட தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார். 

.