This Article is From Jul 17, 2020

கொரோனாவால் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 79 பேர் உயிரிழப்பு! 4,538 பேர் புதியதாக பாதிப்பு!!

சென்னையை பொறுத்த அளவில் 14வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 4,538 பேரில் 1,243 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 83,377 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 1,376 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement
தமிழ்நாடு Written by

Highlights

  • தமிழகத்தில் கொரோனா எண்ணிக்யைானது 1.60 லட்சத்தினை கடந்துள்ளது.
  • 4,538 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது
  • இன்று 79 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 1.60 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 47,539 மாதிரிகளில் 4,538 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 1,60,907 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 3,391 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 1,10,807 ஆக அதிகரித்துள்ளது. இன்று 79 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு 2,315 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 47,782 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.