ஹைலைட்ஸ்
- இன்று கொரோனா எண்ணிக்கை 5,881
- ஒட்டு மொத்த பாதிப்பு 2,45,859 ஆக அதிகரித்துள்ளது.
- இன்று மட்டும் 5,778 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 2.45 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 60,276 மாதிரிகளில் 5,881 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 2வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகியுள்ளது. அதே போல பரிசோதனை எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 2,45,859 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 5,778 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 1,83,956 ஆக அதிகரித்துள்ளது. இன்று முன்னெப்போதும் இல்லாத அளவாக 97 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு 3,935 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 57,968 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையை பொறுத்த அளவில் 28வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,881 பேரில் 1,013 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 99,794 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,113 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 21 பேர் உயிரிழந்துள்ளனர்.