This Article is From Aug 17, 2020

தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 120 பேர் உயிரிழப்பு! 5,890 பேருக்கு தொற்று!!

இன்று மட்டும் 5,667 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,83,937 ஆக அதிகரித்துள்ளது. இன்று 120 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Advertisement
தமிழ்நாடு Written by

Highlights

  • இன்று கொரோனா எண்ணிக்கை 5,890
  • ஒட்டு மொத்த பாதிப்பு 3,43,945 ஆக அதிகரித்துள்ளது
  • இன்று மட்டும் 5,667 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.43 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 67,532 மாதிரிகளில் 5,890 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 19வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தற்போது ஒட்டு மொத்த பாதிப்பு 3,43,945 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 5,667 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,83,937 ஆக அதிகரித்துள்ளது. இன்று 120 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த 15வது நாளாக இன்றும் 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 5,886 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 54,122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,890 நபர்களில் 1,185 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,17,839 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,478 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement
Advertisement