ஹைலைட்ஸ்
- இன்று கொரோனா எண்ணிக்கை 5,990
- ஒட்டு மொத்த பாதிப்பு 4,39,959 ஆக அதிகரித்துள்ளது
- இன்று மட்டும் 5,891 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4.39 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 75,829 மாதிரிகளில் 5,990 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒட்டு மொத்த பாதிப்பு 4,39,959 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 5,891 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,80,063 ஆக அதிகரித்துள்ளது. இன்று 96 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த சில நாட்களாக 100க்கும் அதிகமான உயிரிழப்பு பதிவாகியிருந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 100க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 7,516 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,380 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,990 நபர்களில் 1,025 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,37,732 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,788 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர்.