This Article is From Mar 31, 2020

கொரோனா பாதிப்பு நிவாரண நிதியாக ரூ. 25 ஆயிரத்தை வழங்கிய பிரதமர் மோடியின் தாயார்!

பிரதமர் மோடி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பொது அறக்கட்டளையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

கொரோனா பாதிப்பு நிவாரண நிதியாக ரூ. 25 ஆயிரத்தை வழங்கிய பிரதமர் மோடியின் தாயார்!

பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள ரைசின் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்.

ஹைலைட்ஸ்

  • கொரோனா பாதிப்பு நிவாரண நிதி வழங்குமாறு பிரதமர் மோடி கோரிக்கை
  • ஏராளமான பிரபலங்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்
  • மோடியின் தாயார் ஹீரா பென் ரூ. 25 ஆயிரத்தை வழங்கியுள்ளார்
New Delhi:

கொரோனா நிவாரண நிதியாக பிரதமர் மோடியின் தாயார் ஹீரான பென் ரூ. 25 ஆயிரத்தை தனது சொந்த சேமிப்பிலிருந்து வழங்கியுள்ளார். இந்த தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள ரைசின் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். அவருக்கு 98 வயது ஆகிறது. மோடியின் இளைய சகோதரர் பங்கஜ் மோடி ஹீராவை கவனித்து வருகிறார்.

இதற்கிடையே, கொரோனா நிவாரண நிதியை வழங்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்று ஏராளமானோர் பிரதமர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பி வருகின்றனர்.

பாலிவுட் நடிகர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டோர் கோடிக்கணக்கான ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக அளிக்கத் தொடங்கியுள்ளனர்.

டாடா நிறுவனத்தின் டாடா அறக்கட்டளை சார்பாக ரூ. 1,500 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் அரசு, தனியார் ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் தான் சேமித்து வைத்திருந்த பணத்தில் ரூ. 25 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அறக்கட்டளையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இதற்கிடையே, காங்கிரஸ் இந்த பொது அறக்கட்டளை நிவாரண நிதியை விமர்சித்துள்ளது. ஏற்கனவே பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் ரூ. 3,800 கோடி பயன்படுத்தப்படாமலே உள்ளது என்று அக்கட்சி கூறியுள்ளது.

.