This Article is From Aug 29, 2020

“கடவுளின் தூதராக நிதியமைச்சர் பதிலளிப்பாரா?”; பொருளாதாரம் குறித்து ப.சிதம்பரம் கேள்வி!

ஜி.எஸ்.டி (பொருட்கள் மற்றும் சேவை வரி) வசூலில் உள்ள பற்றாக்குறையை எதிர்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி அரசு வழிகாட்டிய யோசனைகளை சிதம்பரம் இன்று தனது ட்வீட்டில் "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறியுள்ளார்.

கொரோனா நெருக்கடி என்பது கடவுளின் செயல் என்று நிர்மலா தெரிவித்திருந்தார்.

New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் ஒரே இடங்களில் அதிக எண்ணிக்கையில் ஒன்று கூடுவதைத் தவிர்க்க மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்நிலையில், நேற்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொரோனா நெருக்கடி என்பது கடவுளின் செயல் என்று நிர்மலா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கொரோனா தொற்றுநோய் கடவுளின் செயல் என்றால் கொரோனா தாக்கும் முன் 2017/18, 2018/19 மற்றும் 2019/20 ஆகிய ஆண்டுகளில் பொருளாதாரத்தின் வீழ்ச்சியை எவ்வாறு விவரிக்கப் போகிறீர்கள்? என்றும், கடவுளின் தூதராக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிப்பாரா? என்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தொடர் கேள்விகளை இன்று காலை டிவிட்டர் வாயிலாக எழுப்பியுள்ளார்.

சிதம்பரம் மற்றும் பிற மூத்த காங்கிரஸ் தலைவர்கள், காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதங்களில் நிலையான சரிவை சுட்டிக்காட்டியுள்ளனர் - 2018/19 காலாண்டில் 7.1 சதவீதத்திலிருந்து 2019/20 ஆம் ஆண்டில் 4 ஆம் ஆண்டில் 3.1 சதவீதமாக வளர்ச்சி குறைந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

2019-20 ஜனவரி-மார்ச் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.1 சதவீதம் வளர்ச்சியானது அரசாங்கத்தின் பொருளாதார மேலாண்மைக்கு சிறந்த உதாரணம் என்று சிதம்பரம் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.

ஜி.எஸ்.டி (பொருட்கள் மற்றும் சேவை வரி) வசூலில் உள்ள பற்றாக்குறையை எதிர்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி அரசு வழிகாட்டிய யோசனைகளை சிதம்பரம் இன்று தனது ட்வீட்டில் "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறியுள்ளார்.

மாநில வரவுசெலவுத் தொகையை இழப்பீட்டுத் தொகையின் கீழ் உறுதிமொழி அளிப்பதன் மூலம் கடன் வாங்குமாறு மாநிலங்கள் அறிவுறுத்தப்படுகின்றன. இது மாநிலங்களின் நிதிச் சுமையை முற்றிலும் அதிகரிக்கும் என்றும், ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்க மாநிலங்களை அறிவுறுத்தும் போக்கானது மேற்குறிப்பிட்டவாறு மாநிலங்களின் நிதிச் சுமையை அதிகரிக்கதான் பயன்படும் என அவர் கூறியுள்ளார்.

With input from PTI

.