சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில்தான் உயிரிழப்புகள் அதிகம். இங்கு 463 பேர் பலியாகியுள்ளனர்.
ஹைலைட்ஸ்
- சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது
- முன்பை விட தற்போது ஈரானில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது.
- மருந்து கண்டுபிடிக்கப்படாததால் கொரோனாவை எதிர்கொள்வது கடும் சவாலாக உள்ளது
ஈரானில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. சீனாவுக்கு வெளியே ஆசியாவில் மட்டும் 291 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகமாக ஈரான் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 7,161 பேருக்கு கொரோனா தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகில் சுமார் 100 நாடுகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. தற்போது அங்கு நிலைமை சீரடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளில் ஈரான் 4-வது இடத்தில் உள்ளது.
சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில்தான் உயிரிழப்புகள் அதிகம். இங்கு 463 பேர் பலியாகியுள்ளனர். 9,172 பேரை கொரோனா தாக்கியுள்ளது.
இந்தியாவில் 58 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இவர்களில் 25 பேர் ஆண்கள். 31 பேர் பெண்கள் மற்றும் 2 பேர் குழந்தைகள் ஆவர். அவர்களில் சிலர் ஈரானிலிருந்து இந்திய விமானப்படை மூலமாக இந்தியா கொண்டு வரப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள் 14 நாட்கள் கட்டாய மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு காஜியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படைத் தளத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சீனாவின் ஹூபே மாகாணம், வுஹானை மையமாகக் கொண்டு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சீனாவில் 3,200-யை தாண்டியுள்ளது.