மேலும் நாடு முழுவதும் சுமார் 34,500 பேர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றது
ஹைலைட்ஸ்
- சீனா மட்டும் இன்றி இந்த கொரோனா உலகில் சுமார் 20 நாடுகளில் பரவியுள்ளது
- 'லீ' கடந்த வெள்ளி அன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்
- 'சார்ஸ் நோயை மிஞ்சிய கொரோனா' - சீனாவில் 700 பேர் பலி
Beijing: கடந்த டிசம்பர் மாதம் சீனாவை தாக்க தொடங்கிய கொரோனா நோய் தொற்று, தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுவரை சீனாவில் கொரோனா பாதிப்பால் 722 பேர் இறந்துள்ளனர், இது இருபது ஆண்டுகளுக்கு முன்பு சீனாவை தாக்கிய சார்ஸ் நோய் பலிவாங்கிய மக்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்று கூறப்படுகிறது.
ஹூபே மாகாணத்தில் இருந்து வரும் தகவல்களின் அடிப்படையில், சுமார் 3,399 பேர் புதிதாக இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் சுமார் 34,500 பேர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றது.
கடந்த 2002 - 2003ம் ஆண்டில் சீனாவின் ஹாங் காங் நகரை தாக்கிய சார்ஸ் என்ற நோய் தாக்கி 650 பேர் இறந்ததகவும், தற்போது கொரோனா நோய் தொற்று அதை விட அதிக உயிர் பலிவாங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹூபே மாகாணம் மற்றும் அதன் தலைநகர் வுஹானில் சுமார் 56 மில்லியன் மக்கள் கொரோனா பயத்தால் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். சீனா மட்டும் இன்றி இந்த கொரோனா உலகில் சுமார் 20 நாடுகளில் பரவியுள்ளது.
இந்நிலையில் இந்த நோய் தொற்றை பற்றி ஆரம்ப நிலையில் எச்சரிக்கை விடுத்த மருத்துவர் 'லீ' அவர்களை, வதந்திகளை பரப்புவதாக கூறி தண்டித்த அரசுக்கு எதிராக தங்களது கோவத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் சீன மக்கள். மருத்துவர் 'லீ' கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.