This Article is From Aug 17, 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்தைக் கடந்தது; 50,000 பேர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்தைக் கடந்தது; 50,000 பேர் உயிரிழப்பு!

India Coronavirus Cases: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்தது; 50,000 பேர் உயிரிழப்பு!

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்தது
  • இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 50,000 பேர் உயிரிழப்பு
  • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 58,000 பேர் பாதிப்பு
New Delhi:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 50,000 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 58,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 26 லட்சத்தை கடந்துள்ளது. தொடர்ந்து ஒரே நாளில் 941 பேர் உயிரிழந்துள்ளனர். 

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது இந்த இரு நாடுகளை விட இந்தியாவில் தான் அதிகம் பதிவாகி வருகிறது. 

கொரோனா தொற்றின் மையாக இருக்கும் அமெரிக்காவில் இதுவரை 54 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் இதுவரை 33 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை விட கூடுதலாக 7 லட்சம் பேர் பிரேசிலில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 13 நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை உலகளவில் இந்தியாவில் அதிகம் பதிவாகி வருகிறது. 

கடந்த ஜன.30ம் தேதி கேரளாவில் முதல் கொரோனா பாதிப்பு பதிவான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்தை எட்டுவதற்கு 200 நாட்கள் எடுத்துள்ளது. மே.19ம் தேதியன்று பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது. தொடர்ந்து, ஜூலை மத்தியில் 6 லட்சத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை அம்மாத இறுதியில் 16 லட்சத்தை கடந்தது. 

இந்த மாதத்தில் மட்டும் 10 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆக.6ம் தேதி நாட்டில் 20 லட்சம் வழக்குகள் பதிவாகின. 

மூன்று கோடி பரிசோதனைகள் இதுவரை நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 130கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் பாதிப்படைந்த ஒருவர் குணமடையும் வரை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை சோதனை செய்யப்படலாம். நேற்றைய தினம் மட்டும் 7.31 லட்சம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழகம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. அதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் இந்த ஐந்து மாநிலங்களில் தான் பதிவாகியுள்ளது. 

இதுவரை பாதிப்பு அதிகம் உள்ள பத்து மாநிலங்கள் வரிசையில் மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, உத்த பிரதேசம், டெல்லி, மேற்குவங்கம், பீகார், தெலுங்கானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. 

இந்தியாவில் மூன்று கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் வெவ்வேறு கட்ட சோதனை நிலையில் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் கூறினார். இந்த சோதனைகள் அதன் இறுதி கட்டத்தை அடைந்து, உரிய அனுமதி கிடைத்ததும், ஒவ்வொரு இந்தியருக்கும் இந்த தடுப்பூசி கிடைக்க அரசு திட்டம் வகுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

ஸ்பூட்னிக் 5 என்ற முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா கடந்த வாரம் தெரிவித்துள்ளது. மூன்றாவது கட்ட சோதனைக்கு முன்பாகவே இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

உலகளவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 2.16 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7.75 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 

.