This Article is From Jun 17, 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்: ஒரே நாளில் 2,000 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,54,065ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்: ஒரே நாளில் 2,000 பேர் உயிரிழப்பு!

Coronavirus: இந்தியாவில் ஒரே நாளில் 2,000 பேர் உயிரிழப்பு!

ஹைலைட்ஸ்

  • கொரோனா பாதிப்பு நிலவரம்: ஒரே நாளில் 2,000 பேர் உயிரிழப்பு!
  • உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 11,903 ஆக அதிகரித்துள்ளது.
  • தொடர்ந்து குணமடைபவர்களின் விகிதமானது 52.79 சதவீதமாக உள்ளது
New Delhi:

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மாநிலங்கள் புதுப்பித்ததை தொடர்ந்து, நாட்டில் முதல்முறையாக ஒரே நாளில் 2,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 11,903 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,54,065ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து குணமடைபவர்களின் விகிதமானது 52.79 சதவீதமாக உள்ளது. நாட்டிலே அதிக பாதிப்பு கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு மும்பையில் நேற்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,328 ஆக புதிப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மும்பையில் மட்டும் மொத்தமாக 3,167 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் மொத்தமாக 5,537 பேர் உயிரிழந்துள்ளனர். 

டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் இதற்கு முன்பு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை விடுப்பட்டிருதந்ததை மேம்படுத்தியதை தொடர்ந்து, இன்று உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சக வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவிலான சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, 1,63,187 பேருக்கு ஒரே நாளில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மொத்தமாக இதுவரை 60,84,256 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 6.72 சதவீதம் பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, ஜூன் 30ம் தேதிக்கு பின்னர் ஊரடங்கை நீட்டிப்பதா, கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக அடுத்த நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து 6 மாநில முதல்வர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

இதில் ஒரு குறிப்பிட்ட சிக்கல் என்னவென்றால், பல பருவகால நோய்களான காய்ச்சல், சுவாசக் கோளாறுகள் மற்றும் பசியின்மை போன்ற கொரோனா வைரஸிலிருந்து கிட்டத்தட்ட பிரித்தறிய முடியாத அறிகுறிகள் உள்ளன. நோயாளிகள் சரியாக கண்டறியப்படுவதையும், கொரோனா வைரஸுக்கு ஆளாகாமல் இருப்பதையும் உறுதிப்படுத்த அதிக சோதனை, அதிக தனிமை படுக்கைகள் மற்றும் அதிக பாதுகாப்பு உபகரணங்கள் தேவைப்படும் என்பதே இதன் பொருள் ஆகும்.

கொரோனா தொற்று காரணாமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பொதுவான ஸ்டீராய்டு மருந்தான டெக்ஸாமெதாசோனின் குறைந்த அளவுகளில் வழங்குவதால், தொற்றுநோயால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதங்கள் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துள்ளதாக, சோதனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெருங்கிய தொடர்பு மூலமும், முக்கியமாக பாதிக்கப்பட்ட நபர் இருமல், தும்மல் அல்லது பேசும்போது வெளியிடப்படும் சுவாச துளிகள் மூலமாகவும் வைரஸ் தொற்று நேரடியாக நபருக்கு நபர் பரவுதல் ஏற்படுவதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. 

.