This Article is From Jun 14, 2020

கொரோனா சிகிச்சைக்கு ஹோட்டல்களில் 20,000 படுக்கைகளை தயார் செய்யும் டெல்லி அரசு!!

கொரோனா தொற்று நோயாளிகளுக்காக அனைத்து நர்சிங் ஹோம்களிலும் 10 முதல் 49 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்படும். இந்த எண்ணிக்கையானது 5,000 வரை பின் நாட்களில் உயர்த்தப்படும் என்றும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு ஹோட்டல்களில் 20,000 படுக்கைகளை தயார் செய்யும் டெல்லி அரசு!!

95/5000 40 ஹோட்டல்களில் சுமார் 4,000 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் இணைக்கப்படும்.

New Delhi:

தேசிய தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்ககையானதுது 38 ஆயிரத்தினை கடந்துள்ள நிலையில் தற்போது, வரும் வாரங்களில் டெல்லி முழுவதிலும் உள்ள ஹோட்டல்கள் மற்றும் விருந்து அரங்குகளில் 20 ஆயிரம் படுக்கைகளை தயார் செய்ய திட்டமிட்டுள்ளது டெல்லி அரசு. தற்போது 80 படுக்கைகள் டெல்லியின் தேவையாக உள்ளது. முன்னதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வரும் ஜூலை இறுதிக்குள் டெல்லியில் 5.5 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என குறிப்பிட்டிருந்தார். இதன் காரணமாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கலந்துரையாடலை மேற்கொண்டு வருகின்றனர்.

மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தினை அடுத்து டெல்லி, தொற்று பாதித்த மாநிலங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. நேற்று இரண்டாவது முறையாக ஒரே நாளில் 2,000க்கும் அதிகமானோர் டெல்லியில் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விருந்து அரங்குகளில் ஏறத்தாழ 11 ஆயிரம் படுக்கைகள் தயார் செய்யப்பட்டு அவை மருத்துவமனைகளுடன் இணைக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. அதே போல 4,000 படுக்கைகள் ஹோட்டல்களில் தயார் செய்யப்பட்டு தனியார் மருத்துவமனைகளோடு இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நோயாளிகளுக்காக அனைத்து நர்சிங் ஹோம்களிலும் 10 முதல் 49 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்படும். இந்த எண்ணிக்கையானது 5,000 வரை பின் நாட்களில் உயர்த்தப்படும் என்றும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே மருத்துவமனைகளாக மாற்றப்பட்ட ஹோட்டல்களில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சுகாதாரத்துறையின் புதிய வழிக்காட்டுதல்களை பின்பற்றுமாறு அனைத்து மாவட்ட நீதிபதிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக தொற்றுநோயை கையாளும் விதம் குறித்தும், மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாதது குறித்தும் ஆம் ஆத்மி அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருந்தது. “டெல்லியில் நிலைமை கொடூரமானது, பரிதாபகரமானது, டெல்லி மருத்துவமனைகளில் மிகவும் வருந்தத்தக்க நிலைமை உள்ளது. அங்கு உடல்களுக்கு உரிய கவனிப்பும், அக்கறையும் கொடுக்கப்படுவதில்லை. நோயாளிகளின் குடும்பத்தினருக்கு உயிரிழப்புகள் குறித்து கூட தெரிவிக்கப்படுவதில்லை. இதனால், சில சந்தர்ப்பங்களில் நோயாளிகளின் குடும்பங்கள் இறுதி சடங்குகளில் கூட கலந்துகொள்ள முடியவில்லை.“ என நீதிமன்றம் கூறியிருந்தது. அதேபோல், டெல்லி தவிர்த்து, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்திலும் நிலைமை மிகவும் மோசமானதாக உள்ளது என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக இந்த மூன்று மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லியில் வசிப்பவர்களுக்கே டெல்லி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்படும் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். இந்த உத்தரவினை டெல்லி கவர்னர் ரத்து செய்துள்ளார். அதே போல தொற்று அறிகுறி உள்ளவர்களை மட்டுமே சோதிக்க வேண்டும் என்கிற உத்தரவையும் கவர்னர் மாற்றி அமைத்துள்ளார்.

.