1,700 அடி நீளம், 700 அடி அகலம் கொண்ட இந்த பராமரிப்பு மையமானது உலகின் மிகப்பெரிய கொரோனா தொற்று பராமரிப்பு மையமாக கருதப்படுகிறது.
New Delhi: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, 6.73 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், தேசிய தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு ஒரு லட்சத்தினை நெருங்கிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில், டெல்லி கவர்னர் அனில் பைஜால் டெல்லி சத்தர்பூர் பகுதியில் 10,000 படுக்கைகள் கொண்ட கோவிட் பராமரிப்பு மையத்தை இன்று திறந்து வைத்துள்ளார்.
1,700 அடி நீளம், 700 அடி அகலம் கொண்ட இந்த பராமரிப்பு மையமானது உலகின் மிகப்பெரிய கொரோனா தொற்று பராமரிப்பு மையமாக கருதப்படுகிறது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட டெல்லி மற்றும் என்.சி.ஆர் குடிமக்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த மையத்திற்கு சர்தார் படேல் என பெயரிடப்பட்டுள்ளது. இங்கு உள்ள படுக்கைகளில் 10 சதவிகிதமானவை ஆக்ஸிஜன் சிலிண்டர் வசதி கொண்டவை என ஆளுநர் கூறியுள்ளார். மேலும்,
"மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நாங்கள் ஆலோசகர்களைக் கொண்டிருக்கிறோம். எங்களிடம் நல்ல மனநல மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் குழு உள்ளது." என்றும் குறிப்பிட்டுள்ளார்.
லேசான மற்றும் அறிகுறியற்ற கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தும் வசதியில்லாதவர்களும் இங்கே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல நோயாளிகள் ஆரோக்கியமாக இருக்க விளையாட்டு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
"எங்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் இந்த கோவிட் -19 பராமரிப்பு வசதியை கவனித்துக்கொள்வார்கள். கோவிட் நோயாளிகளைக் கையாள்வதில் ஐ.டி.பி.பி.க்கு(இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை) பல மாதங்கள் அனுபவம் உண்டு. ஆரம்பத்தில், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் ஐ.டி.பி.பி நிர்வகித்து வந்தது. நாங்கள் காவல்துறையினருக்காக 200 படுக்கை மையத்தையும் நொய்டாவில் நடத்தி வருகிறோம்." என ஐடிபிபி இயக்குநர் எஸ்.எஸ். தேஸ்வால் கூறியுள்ளார்.
தில்லி அரசு நிர்வாக ஆதரவை வழங்கிய நிலையில், இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை (ஐ.டி.பி.பி) இந்த மையத்தை இயக்கும் நோடல் ஏஜென்சியாக இருக்கும்.
இந்த மருத்துவமனையில், மருத்துவர்களுடன் சேர்ந்து, 2,000 க்கும் மேற்பட்ட இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் (ஐ.டி.பி.பி) மற்றும் பிற மத்திய ஆயுத போலீஸ் படை (சிஏபிஎஃப்) பணியாளர்களும் சிகிச்சை அளித்து நிர்வகிப்பார்கள்.
With inputs from agencies