This Article is From Apr 04, 2020

‘ஊரடங்கை மீறி வெளியே சுற்றுகிறார்’ - தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மகன் புகார்!!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,301 ஆக உள்ளது. உயிரிழப்பு 56-ஆக அதிகரித்திருக்கிறது. 157 பேர் சிகிச்சையால் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement
இந்தியா

ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ம்தேதி வரை நீடிக்கிறது.

Highlights

  • சமூக பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது
  • டெல்லியில் தந்தை வெளியே சுற்றித் திரிவதாக மகன் போலீசில் புகார்
  • நடவடிக்கை எடுப்பதாக டெல்லி போலீசார் உறுதி அளித்துள்ளனர்.
New Delhi:

ஊரடங்கை மீறி தனது தந்தை வெளியே சுற்றித் திரிவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுத்து வீட்டிற்குள்ளேயே இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, மகன் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14-ம்தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனை மீறி பொதுமக்களில் சிலர் வெளியே சுற்றித் திரிவதாக புகார் எழுந்துள்ளது.

இவ்வாறு வெளியே செல்பவர்கள், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகும்போது அவர்களுக்கும் கொரோனா ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. பின்னர் கொரோனா தொற்றை எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் வீட்டிற்குள் வரும்போது, வீட்டில் இருப்பவர்களுக்கும் நோய் பரவக்கூடும்.

இதனை பலரும் செய்ய ஆரம்பித்தால் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று லட்சக்கணக்கானோரை பலிகொடுக்க நேரிடும் என்பதால் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை போட்டுள்ளன.

Advertisement

இந்த நிலையில் தெற்கு டெல்லியின் வசந்த் கஞ்ச் பகுதியை சேர்ந்த அபிஷேக் என்பவர் தனது தந்தை வீரேந்தர் சிங் மீது புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், ஊரடங்கை மீறி தனது தந்தை வெளியே சுற்றித் திரிவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுத்து வீட்டிற்குள்ளேயே இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Advertisement

இதனை ஏற்றுக்கொண்டுள்ள போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,301 ஆக உள்ளது. உயிரிழப்பு 56-ஆக அதிகரித்திருக்கிறது. 157 பேர் சிகிச்சையால் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement