Read in English
This Article is From May 08, 2020

ஒரே நாளில் அதிகபட்ச பாதிப்பு மற்றும் மீட்பு! தேசிய தலைநகரில் கொரோனா!!

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மீண்டும் தொற்றால் சிலர் பாதிக்கப்டுவார்களேயேயானால் அதை கையாள நிர்வாகம் தயாராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
இந்தியா Posted by

தேசிய அளவில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்திற்கு அடுத்து டெல்லி கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதியாகும்.

New Delhi:

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 52 ஆயிரத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில் தேசிய தலைநகர் டெல்லியில் 5,980 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 448 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர். புதியதாக ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை டெல்லியில் 66 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதேபோல மீட்பு விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி மீட்பு விகிதமானது 32.29 சதவிகிதம் என்ற நிலையில் உள்ளது. 389 பேர் சமீபத்தில் குணமடைந்துள்ளனர். இதுவரை 1,931 நபர்கள் குணமடைந்துள்ளனர். தற்போது 3,983 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் டெல்லியில் ஒரே  நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக  அதிகபட்சமாக 428 பேர் கண்டறியப்பட்டிருந்தனர். தேசிய அளவில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்திற்கு அடுத்து டெல்லி கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதியாகும்.

இந்த நிலையில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், டெல்லியை மீண்டும் திறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறியிருந்தார். மேலும், டெல்லிவாசிகள் கொரோனாவுடன் வாழ தயாராக இருக்க வேண்டும் என்றும் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசி,  ஊரடங்கில் தளர்வுகளையும் அறிவித்தார்.

Advertisement

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மீண்டும் தொற்றால் சிலர் பாதிக்கப்டுவார்கள் எனில் அதை கையாள நிர்வாகம் தயாராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கடைகள் முழுமையாக இயங்கவும், 33 சதவிகித பணியாளர்களுடன் தனியார் நிறுவனங்கள் இயங்கவும், பிளம்மர், எலக்ட்ரீஷியன் போன்ற சுய தொழில் செய்பவர்கள் இயங்கவும் கெஜ்ரிவால் அனுமதி அளித்திருந்தார். ஆனால், தொற்று பரவல் மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட (hotspot zones) பகுதியில் மேற்குறிப்பிட்டவற்றிற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதியளித்திருந்தார். டெல்லி வருவாயின் முக்கிய பங்காக டாஸ்மாக் உள்ளது.

Advertisement

டாஸ்மாக்கில் மதுவை வாங்குபவர்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்காது இயங்கினர். முன்னதாக டாஸ்மாக் கடைகளுக்கு அதிக அளவில் மக்கள் வருவதைத் தவிர்க்க டெல்லி அரசு சில்லறை மது விற்பனையில், 70 சதவிகித வரியை விதித்தது. மேலும், மது விற்பனைக்கு இ-டோக்கன் அறிமுகப்படுத்தப்பட்டது.

Advertisement