இது சாதாரண காய்ச்சல் என்று டிரம்ப் குறைத்து மதிப்பிட்டதற்காக டிரம்ப் மீது பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
Washington: சர்வதேச அளவில் கொரோனா தொற்று மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது அமெரிக்க உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தினை கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து பிரதமர் அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தினை ஏற்றுமதி செய்வதை உறுதி செய்திருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த உதவிக்கு அசாதாரண நேரங்களுக்கு நண்பர்களிடையே இன்னும் நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது கருத்தினை தெரிவித்திருக்கிறார். இந்தியா 29 மில்லியன் அளவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதியை உறுதி செய்துள்ளது. "அசாதாரண நேரங்களில் நண்பர்களிடையே இன்னும் நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் குறித்த முடிவுக்கு இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் நன்றி. இந்த உதவி மறக்கப்பட மாட்டாது! அமெரிக்காவின் கொரோனா தொற்றுக்கு எதிரான இந்த போராட்டத்தில் இந்தியாவுக்கு மட்டுமல்ல, மனிதநேயத்திற்கும் உதவுவதில் உங்கள் வலுவான தலைமையான பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி ! " என அமெரிக்க ஜனாதிபதி ட்வீட் செய்துள்ளார்.
முன்னதாக மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புக் கொள்ளாவிட்டால் "பதிலடி கொடுப்பதாக" டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார். மத்திய அரசு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தினை ஏற்றுமதி செய்வதைச் சமீபத்தில் தடைசெய்திருந்தது. இந்த நிலையில் அமெரிக்க மற்றும் இதர நாடுகளிலிருந்து அதிகரித்து வரும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து தேவைக்கான கோரிக்கை காரணமாக கொரோனா தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதியை மத்திய அரசு அனுமதிக்கும் என்று தற்போது குறிப்பிட்டிருந்தது.
குஜராத்தில் உள்ள மூன்று தொழிற்சாலைகளிலிருந்து அமெரிக்காவிற்கு மொத்தம் 29 மில்லியன் மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுவதைப் புதன்கிழமை டிரம்ப் உறுதிப்படுத்தியதாகச் செய்தி நிறுவனம் பி.டி.ஐ தெரிவித்துள்ளது.
தான் 29 மில்லியக்கும் அதிகமான மருந்துகளை பெற இருப்பதை குறிப்பிட்டு, அவர் பெரியவர், அவர் மிகவும் நல்லவர் என்று டொனால்ட் டிரம்ப் அமெரிக்க சேனலான ஃபாக்ஸ் நியூஸிடம் இந்தியப் பிரமர் மோடி குறித்து கூறியுள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு சமீபத்தில் 2,000 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். முந்தைய நாளில் 1,973 ஆகவும், அதற்கு முன்பு 1,939 ஆகவும் இந்த எண்ணிக்கை இருந்துள்ளது. தற்போது 14,695 பேர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் அறிவிப்புகள் தெரிவித்துள்ளன.
ட்ரம்ப் கொரோனா தொற்று குறித்த போதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததன் விளைவே தற்போது அமெரிக்கா உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது என பல விமர்சித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது அமெரிக்கா சுகாதார அவசர நிலையில் உள்ளது.