This Article is From Mar 25, 2020

அத்தியாவசிய பொருட்களை வீடு வீடாக விநியோகிப்பதாக உ.பி. முதல்வர் உறுதி

"உத்தரப்பிரதேசத்தின் 23 கோடி மக்களுக்குக் காய்கறிகள், பால், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் எங்களிடம் உள்ளன என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பிற்காக உங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சமூக தூரத்தைப் பாதிக்க வேண்டாம், "

அத்தியாவசிய பொருட்களை வீடு வீடாக விநியோகிப்பதாக உ.பி. முதல்வர் உறுதி

யோகி ஆதித்யநாத் அத்தியாவசியமானவை மக்களைச் சென்றடையும், மக்கள் வெளியேறக்கூடாது என்றார்.

Lucknow:

அத்தியாவசிய பொருட்களை மக்கள் வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கான திட்டம் உள்ளது, பீதி அடையவோ அல்லது வெளியே செல்லவோ தேவையில்லை என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் செவ்வாய்க் கிழமை மாலை கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 21 நாள் "ஊரடங்கு உத்தரவு போன்ற" முழு பூட்டுதலை செவ்வாய்க் கிழமை இரவு தனது உரையில் அறிவித்திருந்தார். இந்த உத்தரவானது செய்வாய்க் கிழமை  நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும்.

"உத்தரப்பிரதேசத்தின் 23 கோடி மக்களுக்குக் காய்கறிகள், பால், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் எங்களிடம் உள்ளன என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பிற்காக உங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சமூக தூரத்தைப் பாதிக்க வேண்டாம், " என யோகி ஆதித்யநாத் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ யிடம் குறிப்பிட்டிருந்தார்.

"நாளை முதல் காய்கறிகள், பால், பழங்கள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் உங்கள் வீட்டு வாசல்களில் கொண்டு வந்து சேர்க்க 10,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை நாங்கள் பயன்படுத்த உள்ளோம். அத்தியாவசிய பொருட்களை வாங்கச் சந்தைக்குச் செல்ல வேண்டாம் என்று நான் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்" என்று உ.பி முதல்வர் பேசியுள்ளதாக  ANI குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த அமைப்பு எவ்வாறு செயல்படும் என்பதை அவர் விளக்கவில்லை.

முன்னதாக தனது மாநிலத்தை முற்றிலுமாக பூட்டுவதாக அறிவித்த முதலமைச்சர், 15 லட்சம் தினசரி கூலித் தொழிலாளர்களுக்கும், மாநிலம் முழுவதும் 20.37 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் நேரடி பணம் பரிமாற்றத்தின் மூலம் தலா ரூ .1,000 வழங்குவதாக உறுதியளித்தார்.

அத்தியாவசிய பொருட்கள் மக்களின் முக்கிய கவலையாக வெளிவந்ததாலும், மளிகை மற்றும் மருத்துவ கடைகளில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாலும் முதலமைச்சரின் உத்தரவாதம் வந்ததுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பல உறுதிமொழிகளை அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"கடைகளுக்கு வருவதன் மூலம், நீங்கள் COVID-19 பரவுவதை அதிகப்படுத்துகிறீர்கள். தயவுசெய்து தயவுசெய்து வீட்டிற்குள் இருங்கள். நான் மீண்டும் சொல்கிறேன்- அனைத்து அத்தியாவசியங்களும் கிடைப்பதை மையமும் மாநில அரசுகளும் உறுதி செய்யும்". என்று பிரதமர் தனது ட்விட்டில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அரசாங்கம் தனது வாக்குறுதியை எவ்வாறு நிறைவேற்றும் என்று மக்கள் கேள்வி எழுப்பினர். கடந்த நான்கு நாட்களில், டெல்லி பூட்டப்படுவதாக அறிவித்ததால், சில பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களின் கடைகள் கூட மூடப்பட்டிருந்தன. மற்ற இடங்களில், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதை காவல்துறையினர் ஊக்கப்படுத்தினர்.

நேற்று வரை, தில்லி காவல்துறை ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 100 வழக்குகளைப் பதிவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

.