This Article is From Feb 18, 2020

கொரோனா வைரஸ் கட்டாய சிகிச்சை முகாமிலிருந்து முதல்கட்டமாக 200 பேர் விடுவிப்பு!!

சீனாவில் கொரோனா வைரஸ் முதலில் பரவிய பகுதியான வுஹான் மாகாணத்திலிருந்து இம்மாத தொடக்கத்தில் 650 பேரை மத்திய அரசு இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டு வந்தது.

கொரோனா வைரஸ் கட்டாய சிகிச்சை முகாமிலிருந்து முதல்கட்டமாக 200 பேர் விடுவிப்பு!!

விடுவிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன்.

New Delhi:

டெல்லியில் கொரோனா வைரஸ் கட்டாய சிகிச்சை முகாமிலிருந்து முதல்கட்டமாக 200 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். சீனாவிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட சுமார் 400 பேர், டெல்லியில் இந்தோ - திபெத் துணை ராணுவத்தால் அமைக்கப்பட்ட கட்டாய மருத்துவச் சிகிச்சை முகாமில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

சீனாவில் கொரோனா வைரஸ் முதலில் பரவிய பகுதியான வுஹான் மாகாணத்திலிருந்து இம்மாத தொடக்கத்தில் 650 பேரை மத்திய அரசு இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டு வந்தது.

அவர்களில் 200 பேருக்குப் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதும், அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து இந்தோ - திபெத் துணை ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் விவேக் குமார் பாண்டே கூறுகையில், 'கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக அனைத்து பரிசோதனைகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இதில் 406 பேருக்குப் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 200 பேர் இன்று விடுவிக்கப்படுகின்றனர். மீதமுள்ளவர்கள் நாளை விடுவிக்கப்படுவார்கள் ' என்று தெரிவித்தார்.

இந்தோ - திபெத் துணை ராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ள மருத்துவச் சிகிச்சை முகாமை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் இன்று பார்வையிட்டார். அங்குச் சிகிச்சை பெற்று வருவோரைச் சந்தித்து சிகிச்சை பற்றி விவரங்களை அமைச்சர் கேட்டறிந்தார். 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகச் செய்ய வேண்டியவை குறித்து அவர்களிடம் அமைச்சர் ஹர்ஷ வர்தன் விளக்கம் அளித்தார். 

கட்டாய சிகிச்சை முகாமில் தங்க வைக்கப்பட்டவர்கள் விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்களுக்குச் செல்வதற்காக இந்தோ - திபெத் துணை ராணுவத்தால் வாகன ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் டெல்லியைச் சேர்ந்தவர்களாக இருப்பின், அவர்களை நேரடியாக வீட்டிற்கே துணை ராணுவத்தினர் பத்திரமாக அழைத்துச் செல்கின்றனர். 

கொரோனா வைரஸ் அச்சத்தின் பேரில் சீனாவிலிருந்து மொத்தம் 650 பேரை மத்திய அரசு இம்மாத தொடக்கத்தில் இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டு வந்தது. அவர்களில் 406 பேர் இந்தோ - திபெத் துணை ராணுவ மருத்துவ முகாமிலும், மற்றவர்கள் அரியானாவின் மானேசர் மருத்துவச் சிகிச்சை முகாமிலும் கட்டாயமாகத் தங்க வைக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் பரவி விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது. பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் ஒவ்வொருவரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். 

.