This Article is From Jul 28, 2020

மேலும் ஓர் ஆண்டுக்கு ’வொர்க் ப்ரம் ஹோம் நீட்டிப்பு’! - கூகுள் நிறுவனம் அதிரடி!

ஜனவரி மாதத்துடன் முடிவடைய இருந்த ’வொர்க் ப்ரம் ஹோம்’ விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதலில் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் செய்தி வெளியிட்டிருந்தது. 

Advertisement
உலகம்

மேலும் ஓர் ஆண்டுக்கு ’வொர்க் ப்ரம் ஹோம் நீட்டிப்பு’! - கூகுள் நிறுவனம் அதிரடி!

San Francisco, United States:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2021 ஜூலை வரை ஊழியர்களுக்கு வொர் ப்ரம் ஹோமை நீட்டித்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், ஊழியர்களுக்கு முன்னரே திட்டமிடும் திறனை வழங்கும் வகையில், அலுவலகத்தில் இருக்கத் தேவையில்லாத பாத்திரங்களுக்காக வொர் ப்ரம் ஹோம் வசதியை 2021 ஜூன் 30, வரை நீட்டிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். 

உலகெங்கிலும் உள்ள 200,000 கூகிள் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அனைவருக்கும் ஜனவரி மாதத்துடன் முடிவடைய இருந்த 'வொர்க் ப்ரம் ஹோம்' விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதலில் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் செய்தி வெளியிட்டிருந்தது. 

பணியிட இயல்புநிலைக்கு திரும்புவதற்கான அபாயங்கள் குறித்த அதிகரித்து வரும் அச்சங்களுக்கு மத்தியில், இந்த முடிவானது மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், பெரும் முதலாளிகளுக்கும் முன்னெச்சரிக்கை கொள்கையை விரிவுபடுத்துவதற்கான முடிவுகளை எடுக்க வழிவகுக்கும். 

Advertisement

பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை படிப்படியாக மீண்டும் திறக்க எதிர்பார்த்து வருவதாக தெரிவித்துள்ளன. 

இதனிடையே ட்விட்டர் நிறுவனம் அனைத்து ஊழியர்களையும் காலவரையின்றி தொலைதூர வேலைகளில் தொடர அனுமதிக்கும் என்று தெரிவித்துள்ளது.
 

Advertisement
Advertisement