This Article is From Apr 23, 2020

தமிழகத்தில் தான் அதிகளவில் கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர்: எடப்பாடி பழனிசாமி

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் மருத்துவ பணியாளர்களின் உடல்கள் தக்க மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும். மருத்துவ பணியாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும்.

தமிழகத்தில் தான் அதிகளவில் கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர்: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் தான் அதிகளவில் கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர்: எடப்பாடி பழனிசாமி

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் தான் அதிகளவில் கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர்
  • இதுவரை 662 பேர் குணமடைந்துள்ளனர்
  • மருத்துவ பணியாளர்களுக்கு அரசின் சார்பாக நன்றி.

தமிழகத்தில் தான் அதிகளவில் கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 21,393 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,409 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்தமாக உயிரிழப்பு எண்ணிக்கை 681 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை 4,258 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,629 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 662 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து மருத்துவர்கள் காக்க வேண்டும். தமிழ்நாட்டில் தான் அதிகளவில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருக்கின்றனர். அத்தனை பேரும் மருத்துவர்களை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்

மருத்துவத் துறையில் ஈடுபட்டிருக்கும்போது துரதிருஷ்டவசமாக ஏதேனும் தொற்று நோய் ஏற்பட்டால் சிகிச்சை செலவுகளையும் அரசே ஏற்கும். சிகிச்சை பெறும் காலம் பணிக்காலமாக கருதப்படும். அதற்கும் ஊதியம் வழங்கப்படும். சிகிச்சை முடிந்த பிறகு அவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். இத்தொற்றால் மருத்துவ பணியாளர்கள் துரதிருஷ்டவசமாக இறக்க நேரிட்டால், ரூ.50 லட்சம் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும். மேலும், அவர்களின் குடும்பத்தில் தகுதியின் அடிப்படையில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தோம்.

இரவு, பகல் பாராமல் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு அரசின் சார்பாக நன்றி. கொரோனா தொற்றால் உயிரிழக்கும் மருத்துவ பணியாளர்களின் உடல்கள் தக்க மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும். மருத்துவ பணியாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும். அவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களும் முறையாக வழங்கப்படுகின்றன. தனியார் மருத்துவமனை பணியாளர்களுக்கும் அரசு தகுந்த உதவிகளை செய்யும்.

மருத்துவ பணி என்பது மகத்தான பணி, உயிரைக் காக்கும் பணி. இந்த பணியில் ஈடுபடுவோருக்கு அரசு உறுதுணையாக இருக்கும் என்று அவர் தெரிவித்துளார்.
 

.