This Article is From May 01, 2020

பச்சை மண்டலங்களாக அறிவிக்க இனி 28 நாட்கள் தேவையில்லை! 21 நாட்களே போதும்: மத்திய அரசு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களைப் பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறமாக அடையாளப்படுத்தக் கடந்த மாதம், 13 முதல்வர்களுடன் கலந்தாலோசித்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

பச்சை மண்டலங்களாக அறிவிக்க இனி 28 நாட்கள் தேவையில்லை! 21 நாட்களே போதும்: மத்திய அரசு

பசுமை மண்டலங்கள் அல்லது தொற்று இல்லாத மண்டலங்கள் 21 நாட்களுக்குப் பிறகு அறிவிக்கப்பட வேண்டும் என்று அரசு கூறுகிறது

New Delhi:

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பச்சை, ஆரஞ்சு மற்று சிவப்பு நிற மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில் இவ்வாறான பகுப்பாய்வில், புதிய விதிமுறை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முன்னதாக ஒரு மாவட்டத்தில் தொற்று பரவல் 28 நாட்களுக்கு கண்டறியப்படவில்லையெனில் அப்பகுதி பச்சை மண்டலமாக அறிவிக்கப்படும். தற்போது 28 நாட்கள் என்கிற கால அளவினை 21 நாட்களாக மத்திய அரசு குறைத்துள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் எழுதிய கடிதத்தில் இந்த மாற்றத்தினை அரசு குறிப்பிட்டுள்ளது.

ஏப்ரல் 15 மற்றும் 30 தேதிகளுக்கு மத்தியில் நாட்டில், அதிக தொற்று உள்ள பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கையானது 170 லிருந்து 130 ஆக குறைந்துள்ளதாக, அதாவது சுமார் 23 சதவிகிதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், இதே காலகட்டங்களில் பச்சை மண்டலங்களின் எண்ணிக்கையும் 356லிருந்து 319 ஆக குறைந்துள்ளதாகவும், பாதிப்பு ஏற்படாத பகுதிகளிலும் புதியதாகப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

டெல்லி மற்றும் மும்பை உட்பட எட்டு மெட்ரோ நகரங்கள் சிவப்பு பகுதிகளாக உள்ளன. டெல்லி மற்றும் மும்பையில் மட்டுமே 10,000க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் 10க்கும் அதிகமான சிவப்பு மண்டலங்கள் உள்ளன. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 19 சிவப்பு மண்டலங்களும், மகாராஷ்டிராவில் 14 சிவப்பு மண்டலங்களும் உள்ளன.

இதற்கு நேர்மாறாக வடகிழக்கு மாநிலங்களில் அருணாச்சலப் பிரதேசத்தில் 25 பச்சை மண்டலங்களும், அசாமில் 30 பச்சை மண்டலங்களும் உள்ளன.

t9u2hsbk

ஏப்ரல் மாத்தில் சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களைப் பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறமாக அடையாளப்படுத்தக் கடந்த மாதம், 13 முதல்வர்களுடன் கலந்தாலோசித்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

கொரோனா தொற்றுக்கு முன்னதாகவே தேசிய பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியில் இருந்த நிலையில் தற்போது கொரோனா முழு முடக்க(LOCKDOWN) நடவடிக்கை காரணமாகப் பொருளாதாரம் முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது. சமீபத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மாருதி சுசுகி இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் ஒரே ஓரு கார் கூட விற்பனை செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான சூழலைச் சரி செய்யவும், பொருளாதாரத்தினை மீட்டெடுக்கவும், பச்சை மண்டலங்களில் தொழில் நடவடிக்கைகளைத் தொடங்க அரசு சில அறிவிப்புகளை முன்னதாக வெளியிட்டிருந்தது.

இந்த பச்சை பகுதிகளில் கடைகள் திறக்கப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை. சிவப்பு மண்டலங்களில் தற்போது நடைமுறையில் உள்ள கடுமையான நடவடிக்கைகள் தளர்த்தப்படமாட்டாது.

மே 3-ம் தேதியுடன் முழு முடக்க நடைமுறை முடிவுக்கு வருகின்ற நிலையில், சில தளர்வுகள் அனுமதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
.