This Article is From Apr 15, 2020

படகு இல்லங்களை தனிமைப்படுத்தும் முகாம்களாக மாற்ற கேரள அரசு திட்டம்!!

கேரளாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இங்கு மொத்தம் 387 பேருக்கு பாதிப்பு இருந்த நிலையில் 211 பேர் குணம் அடைந்துள்ளனர்.

படகு இல்லங்களை தனிமைப்படுத்தும் முகாம்களாக மாற்ற கேரள அரசு திட்டம்!!

புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் கேரளாவில் குறைந்து வருகிறது.

Alappuzha (Kerala):

கொரோனா பாதிப்பு அதிகரித்தால், படகு இல்லங்களை தனிமைப்படுத்தும் முகாம்களாக பயன்படுத்துவோம் என கேரள அரசு தெரிவித்துள்ளது. 

கேரளாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இங்கு மொத்தம் 387 பேருக்கு பாதிப்பு இருந்த நிலையில் 211 பேர் குணம் அடைந்துள்ளனர். புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் கேரளாவில் குறையத் தொடங்கியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை கண்டறிதல், கண்காணித்தல், தொடர் சிகிச்சை, ஊரடங்கை கடுமையாக பின்பற்றுதல், சமூக விலகல் என பல்வேறு நடவடிக்கைகளை கேரளா தீவிரப்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் படகு இல்லங்களை தனிமைப்படுத்தும் முகாம்களாக மாற்ற கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் அஞ்சனா கூறுகையில், 'கொரோனாவை எதிர்கொள்ள ஆலப்புழா மாவட்ட தயாராக இருக்கிறது. பரவல் தடுப்பு முறைகளை தீவிரமாக கடைபிடித்து வருகிறோம். இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. 

தனிமைப்படுத்துவதற்கு போதிய வசதிகள் மாவட்டத்தில் உள்ளன. தேவை ஏற்பட்டால் படகு இல்லங்களை தனிமைப்படுத்தும் முகாம்களாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பாக படகு இல்ல உரிமையாளர்கள் சங்கத்துடன பேசியுள்ளோம். அவர்களும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்கள். 

படகு இல்லங்களை ஒரே இடம் அல்லது இரண்டு இடங்களுக்கு கொண்டு வந்து அவற்றை தனிமைப்படுத்தும் முகாம்களாக மாற்றலாம். இதனால் 2 ஆயிரம்பேர் வரையில் அங்கு தனிமைப்படுத்த முடியும்' என்று தெரிவித்தார். 
 

.