Read in English
This Article is From Apr 29, 2020

சோதனையில் ஏற்படும் தாமதத்தால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது: டெல்லி அரசு

டெல்லியில் உள்ள 98 கட்டுப்பாட்டு மண்டலங்களில், 11 மண்டலங்களில் மக்கள் தொகை 1 லட்சத்துக்கு அதிகமாக உள்ளது.

Advertisement
இந்தியா Edited by

டெல்லியில் இதுவரை 3108 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 54 பேர் உயிரிழந்துள்ளனர். 877 பேர் குணமடைந்துள்ளனர்.

Highlights

  • சோதனையில் ஏற்படும் தாமதத்தால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது
  • டெல்லியில் இதுவரை 3108 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
  • சோதனை முடிவுகளுக்காக 14 நாட்களகாக காத்திருக்கிறோம்
New Delhi:

பெரிய கட்டுப்பாட்டு மண்டலங்கள் காரணமாகவும், சோதனை முடிவுகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதம் காரணமாகவும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று டெல்லி அரசு மத்திய சுகாதார அமைச்சகத்திடம் தகவல் தெரிவித்துள்ளது. சோதனை முடிவுகள் வெளிவருவதற்கு 10 நாட்கள் அல்லது அதற்கு மேலும் தாமதமாகிறது. இதனால், கட்டுப்பாட்டு மண்டலங்களையும் சுருக்க முடியவில்லை என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை மேற்கொண்ட மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனிடம், சத்யேந்தர் ஜெயின் கூறியதாவது, கட்டுப்பாட்டு மண்டலங்கள் அளவு மிகப்பெரியதாக உள்ளது, இதன் காரணமாகக் கண்காணிப்பு சிக்கலாகி வருகிறது, மேலும் பல சந்தர்ப்பங்களில், சமர்ப்பிக்கப்பட்ட மாதிரிகளின் சோதனை முடிவுகளை நாங்கள் இன்னும் பெறவில்லை, 

டெல்லியில் இதுவரை 3108 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 54 பேர் உயிரிழந்துள்ளனர். 877 பேர் குணமடைந்துள்ளனர். 

Advertisement

கட்டுப்பாட்டு மண்டலங்களைப் பிரித்து சிறியதாக மாற்ற முடிந்தால், டெல்லி சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலத்திற்குச் செல்ல முடியும் என்று டெல்லி லெப்டினன்ட் ஆளுநர் அனில் பைஜால் கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து, மண்டலங்களைப் பிரிப்பதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன, அதனால்தான் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, என்றார்.

டெல்லியில் உள்ள 98 கட்டுப்பாட்டு மண்டலங்களில், 11 மண்டலங்களில் மக்கள் தொகை 1 லட்சத்துக்கு அதிகமாக உள்ளது.

Advertisement

இதேபோல், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள், பணிச்சுமை காரணமாகச் சோதனை முடிவுகள் தாமதமாகி வருவதாக தெரிவித்தனர். டெல்லியில் உள்ள ஆய்வகங்களும் அண்டை பகுதிகளுக்குச் சோதனை முடிவுகளை வழங்குகின்றன. இதனால், சோதனை செயல்முறையை விரைவுபடுத்துவதற்காகத் தனியார் ஆய்வகங்களையும் உட்படுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தற்போதைய நிலவரம் குறித்து உதாரணத்துடன் எடுத்து கூறிய அதிகாரிகள் சோதனை முடிவுகளுக்காக 14 நாட்களாகக் காத்திருப்பதாகத் தெரிவித்தனர். 

Advertisement

இதேபோல், தென்மேற்கு டெல்லி பகுதியிலிருந்து 200 மாதிரிகளை கடந்த ஏப்.16ம் தேதி அனுப்பி வைத்திருந்தோம், அதன் முடிவுகள் தற்போது வரை கிடைக்கவில்லை என்றனர். 

மேலும், 24 மணி நேரத்தில் முடிவுகளைப் பெற முடிந்தால், விரைவாக தொடர்பிலிருந்தவர்களையும் கண்டறிந்து கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வர முடியும் என்றனர். 

டெல்லியில், 80 சதவீத பாதிப்படைந்தவர்கள் அறிகுறியற்றவர்கள் ஆவார்கள். அதனால், சோதனை முடிவுகள் முன்கூட்டியே வெளிவந்தால் டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை குறையும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement