கண்ணன் கோபிநாதன் தன்னிடம் கடமையில் சேருமாறு கேட்டுக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்
New Delhi: தனது ஐ.ஏ.எஸ் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்த கண்ணன் கோபிநாதனை மத்திய அரசு தற்போது மீண்டும் பணியில் சேருமாறு அழைப்பு விடுத்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அவரச நிலையை கருத்தில் கொண்டு மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகிறேன் என்றும், ஆனால் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக சேவையாற்ற விரும்பவில்லை எனக் கூறி அரசு அறிவித்த கோரிக்கையைக் கோபிநாதன் நிராகரித்துள்ளார்.
8 மாதங்களுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்று கூறி தன ஐ.ஏ.எஸ் பொறுப்பினை கோபிநாதன் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“நான் ஐ.ஏ.எஸ் பொறுப்பில் இருந்து விலகி எட்டு மாதங்கள் கடந்துவிட்டன. இந்த நிலையில் அரசு தன்னை மீண்டும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள அழைக்கின்றது. இதன் வாயிலாக என்னைத் துன்புறுத்துவதற்கான வாய்ப்பினை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது. நான் சுயமாகச் சேவையாற்ற விரும்புகிறேன். ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக அல்லாமல்.” என தன்னுடைய முடிவினை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
தான் ராஜினாமா செய்வது ஒரு மாற்றத்தினை உருவாக்கும் என எண்ணியிருந்தேன். ஆனால் ஏதும் உருவாகவில்லை. ஆனால், மனசாட்சி என ஒன்று இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
டாமன், டையு மற்றும் தாத்ரா நகர் ஹவேலி ஆகிய நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி கோபிநாதனுக்கு அரசு அனுப்பியிருந்த கடிதத்தில், ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் மட்டுமே நீங்கள் பணியிலிருந்து விலகியது நடைமுறையாக்கப்படும். ஆனால், தற்போது ஒரு அரசு ஊழியர் தனது கடமையிலிருந்து விலகியுள்ளதாக கொள்ளப்படும் அக்கடிதம் குறிப்பிட்டிருந்தது.
மேலும், உங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு நீங்கள் அறிவுறுத்தப்பட்டீர்கள், ஆனால் இன்றுவரை இந்த யூனியன் பிரதேச நிர்வாகத்தின் கடமைகளுக்கு நீங்கள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்றும், தேசிய அளவில் கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் கீழ், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் மாநில அதிகாரத்தின் அனைத்து அமைச்சகங்கள் / துறைகள், கோவிட் -19 பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தனது பதிலையும், அக்கடிதத்தையும் அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
தாத்ரா மற்றும் ஹவேலியின் முக்கிய துறைகளின் செயலாளரான கோபிநாதன் , நஷ்டத்தை விளைவிக்கும் அரசாங்க மின்சார விநியோக நிறுவனத்தை லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியதில் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏழு ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த கோபிநாதன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று பதவி விலகினார். இந்த முடிவினை மேற்கொண்ட பிறகு அரசு ஒரு வார இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பணிக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டது. இந்த நிலையில் தற்போதைய கடிதம் கோபிநாதனுக்கு இரண்டாவது அழைப்பாகும்.