2,638 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள்.
தமிழகத்தில் நேற்று 5,958 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,290 பேர். ஒட்டுமொத்த அளவில் 3,96,261 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 5,606 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 3,38,060 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 52,362 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 118 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 6,839 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள்.
சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (27.08.2020) வருமாறு:
திருவொற்றியூர் - 283
மணலி - 173
மாதவரம் - 598
தண்டையார்பேட்டை - 977
ராயபுரம் - 849
திரு.வி.க நகர் - 1,008
அம்பத்தூர் - 1,267
அண்ணா நகர் - 1,533
தேனாம்பேட்டை - 881
கோடம்பாக்கம் - 1,579
வளசரவாக்கம் - 1,041
ஆலந்தூர் - 655
அடையாறு - 1,277
பெருங்குடி - 554
சோழிங்கநல்லூர் - 610
மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 232
இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,13,092 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 88 சதவீத மீட்பு விகிம் ஆகும். 2,638 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 13,517 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.