தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4.15 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 80,988 மாதிரிகளில் 6,352 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 30 நாட்களாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியிருந்த நிலையில் தற்போது மீண்டும் 6 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் ஒட்டு மொத்த பாதிப்பு 4,15,988 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (30.08.2020) வருமாறு:
திருவொற்றியூர் - 276
மணலி - 157
மாதவரம் - 547
தண்டையார்பேட்டை - 961
ராயபுரம் - 907
திரு.வி.க நகர் - 1,032
அம்பத்தூர் - 1,087
அண்ணா நகர் - 1,621
தேனாம்பேட்டை - 995
கோடம்பாக்கம் - 1,577
வளசரவாக்கம் - 1,051
ஆலந்தூர் - 763
அடையாறு - 1,237
பெருங்குடி - 591
சோழிங்கநல்லூர் - 576
மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 185
சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 6,352 நபர்களில் 1,285 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,33,173 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,712 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 17 பேர் உயிரிழந்துள்ளனர்.