This Article is From Apr 14, 2020

கொரோனா வைரஸ்: சென்னை நிலவரம் என்ன? - மண்டலம் வாரியாக விவரம்!

Coronavirus in Chennai: சென்னையைப் பொறுத்தவரை நேற்று ஒரு நாளில் கூடுதலாக 17 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

கொரோனா வைரஸ்: சென்னை நிலவரம் என்ன? - மண்டலம் வாரியாக விவரம்!

Coronavirus in Chennai: ஏப்ரல் 12 ஆம் தேதி, இரவு 8:42 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 199 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் இதுவரை 1,075 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
  • சென்னையில் 199 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
  • சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 63 பேருக்கு கொரோனா தொற்று

Coronavirus in Chennai: தமிழகத்தினை பொறுத்தவரை புதியதாக நேற்று 106 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். முழு ஊரடங்கு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு 19வது நாளில் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 1,075 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்திருக்கின்றது. 

தமிழகத்தில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட இடமாகச் சென்னை உள்ளது. சென்னையில் 199 பேர் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக இதுவரை 50 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

சென்னையைப் பொறுத்தவரை நேற்று ஒரு நாளில் கூடுதலாக 17 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (12.04.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 4

மணலி - 0

மாதவரம் - 3

தண்டையார்பேட்டை - 17

ராயபுரம் - 63

திரு.வி.க நகர் - 26

அம்பத்தூர் - 0

அண்ணா நகர் - 22

தேனாம்பேட்டை - 14

கோடம்பாக்கம் - 22

வளசரவாக்கம் - 4

ஆலந்தூர் - 2

 அடையார் - 4

பெருங்குடி - 6

சோழிங்கநல்லூர் - 2

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 8

ஏப்ரல் 12 ஆம் தேதி, இரவு 8:42 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 199 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

.