“தற்போது கொரோனாவைத் தடுக்கும் நோக்கில் போடப்பட்டுள்ள ஊரடங்கு நடவடிக்கையானது..."
ஹைலைட்ஸ்
- காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் பாஜகவை சாடினார் சோனியா
- பாஜக வகுப்புவாத அரசியல் செய்வதாக சோனியா குற்றம் சாட்டினார்
- பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துள்ளார் சோனியா
New Delhi: கொரோனா வைரஸுக்கு எதிராக போராட வேண்டிய நேரத்தில் வகுப்புவாத வெறுப்பு வைரஸை மத்தியில் ஆளும் பாஜக பரப்பி வருவதாக கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி. அதற்கு பாஜக தரப்பு, ‘தரக்குறைவான அரசியலில் ஈடுபட்டுள்ளார்' சோனியா என்று பதிலடி கொடுத்துள்ளது.
“பாஜக, வகுப்புவாத வெறுப்பு வைரஸைப் பரப்பி வருகிறது. இந்த போக்கு ஒவ்வொரு இந்தியனுக்கும் கவலை தர வேண்டும். நாம் அனைவரும் கொரோனா வைரஸை ஒன்றாக எதிர்கொள்ள வேண்டிய இந்த சமயத்தில் இப்படி நடந்து வருவது வேதனைக்குரியது. நமது சமூக நல்லிணக்கத்துக்கு மிகப் பெரும் பாதிப்பு செய்யப்பட்டு வருகிறது. நாம்தான் அதை சரி செய்ய தொடர்ந்து செயல்பட வேண்டும்,” என்று கூறியுள்ளார் சோனியா.
மேலும் தான் பலமுறை பிரதமர் நரேந்திர மோடிக்கு கொரோனா வைரஸ் போராட்டத்தில் ஒத்துழைப்பு கொடுப்பது பற்றியும் யோசனைகளையும் வழங்கியதாகவும், ஆனால் அவை எதுவும் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றும் கூறினார் சோனியா காந்தி.
இறுதியாக அவர், “தற்போது கொரோனாவைத் தடுக்கும் நோக்கில் போடப்பட்டுள்ள ஊரடங்கு நடவடிக்கையானது விவசாயிகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் போன்றோரைக் கடுமையாக பாதித்து வருகிறது. வர்த்தக, வியாபார மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் முற்றிலும் முடங்கியுள்ளதால் கோடிக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மே 3 ஆம் தேதிக்குப் பிறகு நிலைமையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து மத்திய அரசிடம் எந்தவித தெளிவான திட்டமும் இருப்பதாக தெரியவில்லை. தற்போது விதிக்கப்பட்டிருப்பதையும் தாண்டி ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் அதன் விளைவுகள் அபாயகரமானதாக இருக்கும்,” என்று எச்சரித்துள்ளார்.
இதற்கு பாஜக தரப்பிலிருந்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “நாங்கள் வகுப்புவாத அடிப்படையில் எந்த பிரிவையும் ஏற்படுத்தவில்லை. கொரோனா வைரஸுக்கு எதிராக நாங்கள் ஒன்றிணைந்துதான் போராடுகிறோம். காங்கிரஸ் தரக்குறைவான அரசியலில் ஈடுபடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்,” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
World
67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.
India
4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.
State & District Details