This Article is From Mar 09, 2020

உலக அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்!! 100 நாடுகளில் லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

CoronaVirus: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாலத்தீவுகள், பல்கேரியா, கோஸ்டாரிகா, பரோ தீவுகள், பிரெஞ்ச் கயானா, மால்டா, மார்ட்டினிக் மற்றும் மேல்டோவா குடியரசு ஆகிய 8 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

உலக அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்!! 100 நாடுகளில் லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

இந்தியாவில் 41 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஹைலைட்ஸ்

  • கடந்த 24 மணி நேரத்தில் 8 நாடுகள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன
  • ரஷ்யாவில் கட்டாய மருத்துவ முகாமுக்கு வராதவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை
  • கொரோனா வைரஸ் பிறப்பிடமான சீனாவில் பாதிப்பு குறைந்து வருகிறது
New Delhi:

உலகம் முழுவதும் 100 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால் லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி உயிரிழப்பு 3,800-யை தாண்டியுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாலத்தீவுகள், பல்கேரியா, கோஸ்டாரிகா, பரோ தீவுகள், பிரெஞ்ச் கயானா, மால்டா, மார்ட்டினிக் மற்றும் மேல்டோவா குடியரசு ஆகிய 8 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

இந்தியாவில் மொத்தம் 41 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியத் துறைமுகங்களில் எந்தவொரு வெளிநாட்டுக் கப்பலும் நிறுத்தி வைக்கத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஜப்பான் நாடுகளுக்குச் செல்ல விசா தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

சீனாவில் ஹாங்காங் மற்றும் மக்காவு பகுதிகளைத் தவிர்த்து மற்ற இடங்களில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரமாகவும், உயிரிழப்பு 3,097-ஆகவும் உள்ளது. 

சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் ஒன்றரை கோடி பேருக்குச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இங்கு மட்டும் சுமார் 7 ஆயிரம் பேருக்குப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குறிப்பாக இத்தாலி மக்கள் தொகையில் 4-ல் ஒரு பகுதியினர் கட்டாய மருத்துவச் சிகிச்சை முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா அச்சுறுத்தல் குறித்து கவலை தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், அதனை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் தயாராக இருக்க  வேண்டும் என்றும், நோய் தாக்குதலைக் கண்டுபிடிக்கக் கருவிகளை நிலுவையில் வைத்திருக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ரஷ்யாவில் 17 பேருக்கு கொரோன பாதிப்பு உள்ளது. அறிகுறியுடன் இருப்பவர்கள் கட்டாய மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதற்காக மருத்துவச் சிகிச்சை முகாமுக்கு வராதவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. 

தென் கொரியாவில் தற்போது 7.313 பேருக்கு கொரோன பாதிப்பு உள்ளது. 

உலகம் முழுவதும் கொரோன பரவி வரும் நிலையில், அது உருவான சீனாவில் அதன் தாக்கம் குறைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக வைரஸின் பிறப்பிடமாக கருதப்படும் ஹூபே மாகாணத்தின் வுஹானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44-ஆக உள்ளது. 

.