This Article is From Apr 01, 2020

ஓராண்டு ஊதியத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்த முதல்வர்!!

கொரோனா நிவாரண நிதியை மக்கள் மனம் முன்வந்து வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்துள்ளார். இதனை ஏற்று ஏராளமான பிரபலங்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

ஓராண்டு ஊதியத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்த முதல்வர்!!

தனியார் தொழில் நிறுவனங்கள் நிதியுதவி அளித்துள்ளன.

ஹைலைட்ஸ்

  • கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்க நிவாரண நிதி வசூலிக்கப்படுகிறது
  • பிரபலங்கள், தொழில் நிறுவனங்கள் நன்கொடை அளிக்கின்றனர்
  • கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது ஓராண்டு ஊதியத்தை வழங்கியுள்ளார்.
Bengaluru:

கொரோனா நிவாரண நிதியாக தனது ஒருமாத ஊதியத்தை கர்நாடக முதல்வர் எடியூரப்பா வழங்கியுள்ளார்.

கொரோனா நிவாரண நிதியை மக்கள் மனம் முன்வந்து வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்துள்ளார். இதனை ஏற்று ஏராளமான பிரபலங்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

பாலிவுட் நடிகர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டோர் கோடிக்கணக்கான ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக அளிக்கத் தொடங்கியுள்ளனர்.

டாடா நிறுவனத்தின் டாடா அறக்கட்டளை சார்பாக ரூ. 1,500 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் அரசு, தனியார் ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்து வருகின்றனர்.

இதேபோன்று மாநில அளவில் முதல்வர் நிவாரண நிதிக்கு மக்களும், பிரபலங்களும் நிதியுதவி அளிக்கின்றனர். இந்த நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது ஒரு மாத ஊதியத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-

நாம் மிகவும் இக்கட்டான சூழலில் இருக்கிறோம். வேறு வழியில்லை. இந்த கஷ்டமான சூழலை நாம் சமாளிக்கத்தான் வேண்டும். தனிப்பட்ட முறையில் நான் எனது ஓராண்டு ஊதியத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்து விட்டேன். எல்லோரும், நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அது மிகச்சிறிய தொகையாக இருந்தாலும் பரவாயில்லை. நன்றி.

இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

.