This Article is From Apr 14, 2020

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரம்!

Coronavirus in TN: தமிழகத்தில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாகச் சென்னை உள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரம்!

Coronavirus in TN: தமிழகத்தில் இதுவரை 50 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் இதுவரை 1,075 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
  • தமிழக தலைநகரம் சென்னையில்தான் கொரோனா நோயாளிகள் அதிகம்
  • சென்னையில் மொத்தமாக 199 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Coronavirus in TN: தமிழகத்தினை பொறுத்தவரை புதியதாக நேற்று 106 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். முழு ஊரடங்கு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு 19வது நாளில் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 1,075 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்திருக்கின்றது. 

தமிழகத்தில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாகச் சென்னை உள்ளது. சென்னையில் 199  பேர் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 50 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரம் கீழ் வருமாறு:

சென்னை - 199

கோயம்புத்தூர் - 119

ஈரோடு - 64

திருப்பூர் - 61

திருநெல்வேலி - 58

திண்டுக்கல் - 56

நாமக்கல் - 45

திருச்சி - 43

செங்கல்பட்டு - 42

தேனி - 41

ராணிப்பேட்டை - 38

திருவள்ளூர் - 30

விழுப்புரம் - 27

மதுரை - 25

கரூர் - 25

தூத்துக்குடி - 24

நாகை - 25

கடலூர் - 19

சேலம் - 18

திருப்பத்தூர் - 16

கன்னியாகுமரி - 15

திருவாரூர் - 13

வேலூர் - 12

விருதுநகர் - 11

தஞ்சாவூர் - 11

நீலகிரி - 9

திருவண்ணாமலை - 7

காஞ்சிபுரம் - 7

சிவகங்கை - 6

கள்ளக்குறிச்சி - 3

தென்காசி - 2

ராமநாதபுரம் - 2

பெரம்பலூர் - 1

அரியலூர் - 1
 

.