বাংলায় পড়ুন Read in English
This Article is From May 27, 2020

இந்தியாவில் 1.50 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! முக்கியத் தகவல்கள்!!

தற்போது 83,004 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

Advertisement
இந்தியா Posted by

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.50 லட்சத்தினை கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 6,387 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல 170 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 4,337 பேர் உயிரிழந்துள்ளனர். 64,425 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,51,767 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 83,004 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கடந்த ஒரு வாரக்காலமக நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படட்வர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சராசரியாக நாளொன்றுக்கு 6,000 என்கிற அளவில் புதியதாக தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் கண்டறியப்படுகின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளில் இந்தியா பத்தாவது இடத்தில் உள்ளது. மகராஷ்டிரா, தமிழகம், குஜராத் மற்றும் டெல்லி போன்ற பகுதிகள் அதிக அளவு தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் முன்னணியில் உள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 50 ஆயிரத்தினை கடந்துள்ளது.

  • இந்தியாவில் வடகிழக்கு மாகணங்களை பொறுத்த அளவில் கடந்த சில தினங்களாக தொற்று பரவலின் எண்ணிக்கையானது அதிகரித்து வந்தவாறு உள்ளது. அசாமில் தொற்று எண்ணிக்கையானது 300லிருந்து 600க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மொத்தமாக 682 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 613 பேர் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் 2.3 லட்சம் பேர் தற்போது மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது பெரிய சவாலாக மாறியுள்ளது.
  • இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் கேரளம் தொற்றை கட்டுப்படுத்துவதில் சிறந்து விளங்குவதாக சர்வதேச அளவில் பாராட்டினை பெற்றிருந்தது. இந்நிலையில், மத்திய அரசானது முன் அறிவிப்பின்றி மாநிலத்திற்கு சிறப்பு ரயில்களை அனுப்புகிறது என்றும், இந்த நடவடிக்கையானது தொற்றினை கையாள்வதில் குழப்பத்தினை ஏற்படுத்தி தொற்றை அதிகரிக்க வழிவகை செய்யும் என மாநில முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கேரளாவின் நிதியமைச்சர் ஐசக், “ரயில்வே துறை கேரளாவை தொற்று பரவல் மையமாக மாற்ற விரும்புகிறது” என குற்றம் சாட்டியுள்ளார்.
  • இதே போல மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பிரச்சனை அரசியல் பிரச்சனையாக முன்னெழுந்துள்ளது. அம்மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், “உத்தவ் தாக்ரே அரசு தொற்றை தடுக்க தவறிவிட்டது“ என குற்றம்சாட்டி வருகிறார். தங்கள் மாநிலத்திற்கு போதுமான ரயில்களை மத்திய அரசு இயக்கவில்லை என மகாராஷ்டிரா விமர்சித்துள்ளது. ஆனால், போதுமான பயணிகள் இல்லாததால்தான் ரயில்கள் இயக்கப்படவில்லை என மத்திய அரசு  தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் பலர் குவிந்துள்ளனர்.
  • இரண்டு மாதங்களுக்கு பிறகு தொடங்கப்பட்ட உள்நாட்டு விமான போக்குவரத்தில், நேற்று சென்னையிலிருந்து கோவை வந்தடைந்த 23வயது பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதே போல, டெல்லி-லூதியானா விமானத்தில் பயணம் செய்த 11 பேரில் ஒருவரான 50 வயதான ஏர் இந்தியா ஊழியருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இரு விமானங்களில் பயணித்த பயணிகள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • இரண்டு மாதங்களுக்கு பிறகு தொடங்கப்பட்ட உள்நாட்டு விமான போக்குவரத்தில், நேற்று சென்னையிலிருந்து கோவை வந்தடைந்த 23வயது பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதே போல, டெல்லி-லூதியானா விமானத்தில் பயணம் செய்த 11 பேரில் ஒருவரான 50 வயதான ஏர் இந்தியா ஊழியருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இரு விமானங்களில் பயணித்த பயணிகள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • மத்திய அரசு வெளியிட்ட ஆரோக்ய சேது செயலியை அனைத்து விமான பயணிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பயன்படுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த செயலியின் தரவுகள், அதாவது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் திருடப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் சந்தேகம் எழுப்பப்பட்டது. இந்த செயலியை மேம்படுத்துவதற்கு யோசனைகள் தெரிவித்தால் ஒரு லட்சம் பரிசு தொகை வழங்கப்படும்  என அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.
  • தெலுங்கானா மாநிலத்தினை பொறுத்த அளவில் குறைந்த அளவிலான பரிசோதனைகள் மேற்கொள்வது குறித்து அம்மாநில உயர் நீதிமன்றம் மாநில முதல்வர் சந்திர சேகரராவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் எண்ணிக்கையை குறைத்து காட்டுவது என்பது மோசமான செயல் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இம்மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2 ஆயிரத்தினை நெருங்கி வருகின்றது.  இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • இம்மாத இறுதியுடன் முழு முடக்க நடவடிக்கை முடிவடைய உள்ள நிலையில், தேசிய தலைநகர் டெல்லியை பொறுத்த அளவில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்நாட்டு விமான சேவை மற்றும் குறிப்பிட்ட அளவிலான ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் பயணிகளுக்கான மற்றும் போக்குவரத்திற்கான இயக்க நடைமுறைகளை (SOP) சம்பந்தப்பட்ட துறைகள் வெளியிட்டிருந்தது. அதேபோல மெட்ரோ போக்குவரத்திற்கும் (SOP) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டாய உடல் வெப்பநிலை பரிசோதனை மற்றும் தனி மனித இடைவெளி ஆகியவை கடைப்பிடிக்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
  • தற்போது கொரோனா தொற்று பரிசோதனைக்கு வசூலிக்கப்படும் தொகையான ரூ 4,500/- தள்ளுபடி செய்து அதற்கான விலையை மத்திய மாநில அரசுகள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
  • நாகாலாந்தை பொறுத்த அளவில், இதுவரை தொற்றால் ஒருவர் கூட பாதிக்கப்பட்டிருக்காத நிலையில் சமீபத்தில் மூன்றுபேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது. 20 வயதிற்கு உட்பட்ட இந்த மூவரும் சமீபத்தில் சிறப்பு ரயில் மூலமாக சென்னையிலிருந்து நாகாலாந்திற்கு சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • கொரோனா தொற்று காரணமாக சர்வதேச நாடுகளை போல இந்தியாவும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றது. ஜனவரி முதல் மார்ச் காலாண்டில் வளர்ச்சி 1.2 சதவீதமாக குறைந்துள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் தரவுகள் குறிப்பிடுகின்றன. தற்போது நிலையில் அடுத்த ஆண்டுகளிலும் வளர்ச்சி எதிர்மறையாகதான் இருக்கும் என் ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கின்றது.
Advertisement