This Article is From May 31, 2020

நாடு முழுவதும் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,164ஐ கடந்தது!!

கடந்த 24 மணி நேரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 8,380 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 193 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,164ஐ கடந்தது!!
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,82,143 ஆக அதிகரித்துள்ளது. 89,995 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 86,984 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 5,164 அக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 8,380 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 193 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • மத்திய அரசு முழு முடக்க நடவடிக்கை ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக நேற்று அறிவித்திருந்தது. நீட்டிப்புடன் சேர்த்து பல தளர்வுகளையும் மத்திய அரசு அனுமதித்துள்ளது. வணிக வளாகங்கள், உணவகங்கள், வழிப்பாட்டு தலங்களுக்கும் கட்டுப்பாட்டு மண்டலங்கள் தவிர மற்ற பகுதிகளில் தளர்வுகள் அனுமதிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
  • மாநிலங்களுக்கிடையேயான சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்திற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன. இரவு 7 மணியிலிருந்து காலை 7 மணி என்கிற அளவில் இருந்த ஊரடங்கு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை என மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. நிலைமையை பொறுத்து அடுத்த சில வாரங்களில் பள்ளிகள் மற்றும், சர்வதேச விமான போக்குவரத்திற்கான தளர்வுகள் அறிவிக்கப்படும்.
  • மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி மாவட்ட அதிகாரிகளால் கட்டுப்பாட்டு மண்டலங்கள் வரையறுக்கப்படும். இந்த மண்டலங்களில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
  • நாடு முழுவதும், கடந்த ஒரு வாரக் காலகட்டங்களில் ஏறத்தாழ 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் புதியதாக கண்டறியப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கடந்த வார தொடக்கத்தில் 1.31லட்சம் மக்கள் தொற்றால் பாதிப்படைந்திருந்தனர். தொற்றால் பாதிக்கப்பட்ட சர்வதேச நாடுகளில் முதல் 10 இடங்களுக்குள் இந்தியா நுழைந்தது.
  • இந்தியாவில் தொற்று இரட்டிப்பாக பரவும் நாட்களின் எண்ணிக்கையானது 13.3 நாட்கள் என்ற அளவிலிருந்து 15.4 நாட்கள் என்கிற அளவில் உயர்ந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே  போல இறப்பு எண்ணிக்கை 2.86 சதவிகிதம் என்கிற அளவில் உள்ளதாக  பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • நாட்டில் அதிக அளவு தொற்று பாதிப்புகளை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இம்மாநிலத்தில் 114 காவலர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,330 ஆக அதிகரித்துள்ளது.
  • தேசிய தலைநகர் டெல்லியை பொறுத்த அளவில், நேற்று முன்னெப்போதும் இல்லாத அளவாக 1,163 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 18 ஆயிரத்தினை கடந்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் ஊரடங்கு நிரந்தரமாக இருக்க முடியாது என டெல்லி முதல்வர் அர்விந் கெஜ்ரிவால் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.  மேலும், தொற்று தடுப்பு பணிகளில் டெல்லி முன்னிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
  • நாடு முழுவதும் இதுவரை 90 ஆயிரம் நோயாளிகள் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும், நேற்று மட்டும் 11 ஆயிரம் பேர் மீண்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
  • சர்வதேச அளவில் 60 லட்சம் மக்களுக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • அமெரிக்கா சர்வதேச அளவில் கொரோனா தொற்று பரவலின் மையாக மாறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 960 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 1,769,776 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பினுடைய உறவை துண்டித்துக்கொள்வதாக அதிபர் டொனால்ட் டிராம்ப் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.