This Article is From Apr 27, 2020

லாக்டவுன் நிலைமை குறித்து மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பீகார், ஒடிசா, குஜராத், ஹரியானா, உத்தரகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம் மற்றும் புதுச்சேரி மத்தியப் பிரதேச முதலமைச்சர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்க வாய்ப்புள்ளது

லாக்டவுன் நிலைமை குறித்து மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி முதல்வர்களுடன் வீடியோ மாநாட்டை நடத்துகிறார்.

New Delhi:

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 27,892 ஆக அதிகரித்திருக்கக்கூடிய நிலையில், முழு முடக்கம்(LOCKDOWN) அறிவிக்கப்பட்ட பிறகு தற்போது பிரதமர் நரேந்திர மோடி  மாநில முதல்வர்களுடன் ஆலோசனையை மேற்கொண்டுள்ளார். காணொளி காட்சி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனையில் நாடு முழுவதுமிருந்து ஒன்பது முதல்வர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடலில், நடைமுறையில் உள்ள முழு முடக்கத்தினை நீட்டிக்கவும், தளர்த்தவும் கோரிக்கைகள் முதல்வர்களால் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீகார், ஒடிசா, குஜராத், ஹரியானா, உத்தரகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம் மற்றும் புதுச்சேரி மத்தியப் பிரதேச முதலமைச்சர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்க வாய்ப்புள்ளது.

அதே போல வடகிழக்கிலிருந்து மேகாலயா மற்றும் மிசோரம் முதலமைச்சர்கள் இதில் பங்கேற்பார்கள்.

பீகார் முதல்வர் நதீஷ் குமார், நடைமுறையில் உள்ள முழு முடக்க நடவடிக்கையில் தளர்வுகள் அனுமதிக்கப்பட வேண்டும் என கோருவார். பீகார் மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் மாநிலங்களுக்குத் திரும்ப இந்த கோரிக்கை உதவும். இந்த நிலையில் மக்கள் போக்குவரத்து மற்றும் வணிக போக்குவரத்தினை மாநிலங்களுக்கிடையே எளிமையாக்க புதிய அறிவிப்பினை வெளியி மத்திய அரசை பீகார் முதல்வர் கோருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அசாம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்கள் முழு முடக்க நடவடிக்கையில் இருந்து விலகும் கோரிக்கை முன்வைக்க வாய்ப்பிருக்கிறது. இந்த மாநிலங்களில் கொரோனா தொற்று குறைந்த அளவில் இருப்பதால் வணிகத்திற்கான போக்குவரத்தினை தொடர முனைப்பாக உள்ளது.

சில மாநிலங்கள், தற்போது தொடரக்கூடிய நிலையே தொடரவும், மாநிலங்களுக்கிடையே மற்றும் மாநிலங்களுக்கு உள்ளே நடைபெறும் போக்குவரத்து தடை தொடரவும் விருப்பம் தெரிவிக்கலாம்.

பிரதமர் அலுவலகம் தரப்பிலிருந்து ஏப்ரல் 20 அன்று வழங்கப்பட்ட சில தளர்வுகள் மற்றும், மருத்துவ சோதனைக் கருவிகள், மருத்துவர்களின் பாதுகாப்புகள் குறித்து கேள்வியெழுப்ப வாய்ப்புள்ளது.

தொற்று நோயை எதிர்கொள்ளவும், பொருளாதார பாதிப்புகளைச் சீராக்கவும் மாநில அரசுகள் மத்திய அரசிடம் பொருளாதார உதவிகளைக் கோர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி தமிழகத்திற்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவியைக் கோருவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே போல பல மாநிலங்கள் நிதி கோரும் நிலையில் நிதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நிதி பொறுப்பு மற்றும் நிதிநிலை மேலாண்மை சட்டத்தில் திருத்தம் குறித்து மத்திய மாநில அரசுகள் விவாதிக்க முடியும்,

முன்னதாக நடைபெற்ற கலந்துரையாடல்களில் மாநில அரசுகள் தங்கள் கோரிக்கையினை முன்வைத்துள்ளன.

கடந்த மாதம் 20 அன்று நடைபெற்ற கலந்துரையாடலில் எட்டு மாநிலங்கள், தொற்று பரவலைக் கட்டுப்படுத்தல், மருத்துவ உள்கட்டமைப்பு வசதியினை மேம்படுத்துதல், மற்றும் உள்ளூர் சுகாதார வளாகங்களைப் பயிற்றுவித்தல் தொடர்பாக தங்களது கருத்துகளைப் பதிவு செய்திருந்தன.

அதேபோல ஏப்ரல் 2 அன்று நடைபெற்ற கலந்துரையாடலில் முழு முடக்கம் முடிந்த பின்பு இயல்பு நிலைக்குத் திரும்புவது குறித்து எட்டு மாநில அரசுகள் தங்கள் கருத்துகளை பதிவு செய்திருந்தன.

இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 11 அன்று நடைபெற்ற கலந்துரையாடலில் 13 மாநிலங்கள் முழு முடக்க நடவடிக்கை நீட்டிக்கப்பட வேண்டும் என கோரியிருந்தன. பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களில் கொரோனா தொற்று குறைந்த எண்ணிக்கையில் பரவுகிறது. மேகாலயாவில் 12 பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மிசோரத்தில் மற்றும் அருணாச்சல பிரதேசம்   மாநிலங்களில் தலா ஒரு மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

.