This Article is From Apr 07, 2020

அடுத்த வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,000ஆக அதிகரிக்கலாம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,421 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 114 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,000ஆக அதிகரிக்கலாம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,421 ஆக அதிகரிப்பு

ஹைலைட்ஸ்

  • அடுத்த வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,000ஆக அதிகரிக்கலாம்
  • கொரோனா பாதிப்புக்கு 114 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,421 ஆக அதிகரிப்பு
New Delhi:

கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது தற்போதைய விகிதம்படி, தொடர்ந்தால் ஏப்.14ம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு முடிவடையும் போது, 17,000 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என அரசு தகவல் அறிக்கை தெரிவிக்கின்றது. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 354 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதைதொடர்ந்து, மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,421 ஆக அதிகரித்துள்ளதாகவும், 114 பேர்
உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த 8 நாட்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது இரண்டு மடங்காக உயர்ந்து வந்தது, தற்போது, நான்கு முதல் 6 நாட்களில் உயர்ந்து வருகிறது. 
 

msbpelq

மார்ச் 15ம் தேதி முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. 


இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மார்ச் 15 முதல் 20ம் தேதியில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. அடுத்து, மார்ச 20 முதல் 23ம் தேதிகளில் 3 நாட்களில் வேகம் அதிகரித்துள்ளது. 

இதையடுத்து, மார்ச் 23 முதல் 29 வரை 6 நாட்களுக்கு ஒரு முறை பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பானது. தொடர்ந்து, மார்ச் 29 முதல் ஏப்.6ம் தேதி வரை 4 நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பாகி வருகிறது. 

இந்தியாவில் 7.1 நாட்களில் மெதுவாக இரட்டிப்பாக வேண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, டெல்லியில் நடந்த மதக்
கூட்டத்தால், 4.1 நாட்களில் வேகமாக இரட்டிப்பாகி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தகவல் தெரிவித்திருந்தது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இதுவரை சுமார் 90,000 பேருக்கு கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்தியுள்ளது. மேலும், விரைவாக சோதனை செய்யும் 5 லட்சம் ரேபிட் சோதனை கருவிகளும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. 

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
.