বাংলায় পড়ুন Read in English
This Article is From Apr 29, 2020

டெல்லி சிஆர்பிஎப் பட்டாலியனில் 49 பேருக்கு கொரோனா தொற்று; ஒருவர் உயிரிழப்பு!!

பாதிக்கப்பட்டவர்களாகக் கண்டறியப்பட்டவர்கள் டெல்லியின் மண்டவாலியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த இரு தினங்களில் இந்த குழுவில் தொற்று வேகமாக அதிகரித்து வந்திருக்கிறது.

Advertisement
இந்தியா

கடந்த இரு தினங்களில் இந்த குழுவில் தொற்று வேகமாக அதிகரித்து வந்திருக்கிறது.

New Delhi :

தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) பட்டாலியனில் 47 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாம் காணப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரை பரிசோதித்ததில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் 1,000 பேர் கொண்ட முழு பட்டாலியனும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களாகக் கண்டறியப்பட்டவர்கள் டெல்லியின் மண்டவாலியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த இரு தினங்களில் இந்த குழுவில் தொற்று வேகமாக அதிகரித்து வந்திருக்கிறது.

அசாமைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க ஜவான் ஒருவர் நேற்று சப்தர்ஜங் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இவர் நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 24 அன்று இந்த பட்டாலியனைச் சேர்ந்த 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். பின்னர் அடுத்த நாள் பரிசோதனையில் எண்ணிக்கை 15 உயர்ந்திருந்தது. சிஆர்பிஎப் பயன்படுத்தும் வாகனங்களில் சானிடிசர் இயந்திரங்களை வைப்பதை உறுதி செய்ய வேண்டும் என சிஆர்பிஎப் உயர்மட்டக்குழு கூறியுள்ளது.

Advertisement

சிஆர்பிஎப்பின் துணை மருத்துவ பிரிவில் நர்சிங் உதவியாளராக இருக்கும் ஜவான் ஒருவர், இம்மாத தொடக்கத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டார். இவரிடம் ஏப்ரல் 17அன்று தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டன. 21 அன்று தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது இவர் டெல்லியின் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேசிய அளவில் கொரோனா தொற்றால் இதுவரை 31,332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் 1,007 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement