This Article is From Jun 08, 2020

‘அரசு என்ற பெயரில் சர்க்கஸ் நடத்துகிறார்கள்’ – சிவசேனாவை விமர்சிக்கும் பாஜக

கொரோனா வைரஸ் பரவலை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து மகாராஷ்டிர அரசு உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

‘அரசு என்ற பெயரில் சர்க்கஸ் நடத்துகிறார்கள்’ – சிவசேனாவை விமர்சிக்கும் பாஜக

காணொலி காட்சி வாயிலாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.

Mumbai:

அரசு என்ற பெயரில் சர்க்கஸை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று மகாராஷ்டிர அரசையும், சிவசேனா கூட்டணியையும் பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

பாஜக மூத்த தலைவரும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் காணொலி காட்சி வாயிலாக மகாராஷ்ர பாஜக தொண்டர்களிடையே பேசினார்.

ராஜ்நாத் தனது உரையில் கூறியதாவது-

மகாராஷ்டிராவில் அரசு என்ற பெயரில் சிவசேனா கூட்டணி சர்க்கஸை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவாரும் இருக்கிறார் என்பதுதான் துரதிருஷ்டமாக உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் ஆம்புலன்சுக்காக 16 மணி நேரம் காத்துக்கிடக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது மகாராஷ்டிராவில் அரசு ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகம்தான் எனக்கு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து மகாராஷ்டிர அரசு உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
.