This Article is From Apr 23, 2020

வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்க காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சமையலறை!

இது தவிர, கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட முதல் நாளிலிருந்து 94 சமையலறைகள் ஏற்கனவே இயங்கி வருகின்றன

வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்க காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சமையலறை!

வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்க காங்., கட்சி அலுவலகத்தில் சமையலறை!

ஹைலைட்ஸ்

  • உணவு வழங்கும் வகையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சமையலறை
  • கட்சி அலுவலகத்தில் இன்று திறக்கப்பட்ட 95வது சமையலறையாகும்.
  • தினசரி 50 ஆயிரம் பேருக்கு சமைத்த உணவை வழங்குகிறோம்,
New Delhi:

டெல்லியில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கும் வகையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சமையலறையை திறந்துள்ளது. 

இது கட்சி அலுவலகத்தில் இன்று திறக்கப்பட்ட 95வது சமையலறையாகும்.

இது தவிர, கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட முதல் நாளிலிருந்து 94 சமையலறைகள் ஏற்கனவே இயங்கி வருகின்றன ”என்று பிசிசி தலைவர் அனில் சவுத்ரி தெரிவித்துள்ளார். 

"முன்னதாக, நாங்கள் ஏழை மக்களுக்கு உலர் பொருட்களைக் கொடுத்து வந்தோம், இப்போது நாங்கள் எங்கள் சமையலறை வழியாக டெல்லி முழுவதும் தினசரி 50 ஆயிரம் பேருக்கு சமைத்த உணவை வழங்குகிறோம், ஊரடங்கு தளர்த்தப்படும் வரை நாங்கள் தொடர்ந்து உணவுகளை வழங்குவோம்" என்று அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் பரவுவலை கட்டுபடுத்தும் விதமாக மத்திய அரசு மே 3 வரை பூட்டுதலை நீட்டித்துள்ளது. 
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 21,393 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,409 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்தமாக உயிரிழப்பு எண்ணிக்கை 681 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை 4,258 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

.