ஒட்டுமொத்தமாக தமிழக அளவில் மொத்தம் 320 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Chennai: சென்னையில் கொரோனாவை வென்று பணிக்கு திரும்பிய உதவி ஆய்வாளருக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை மாநகர போலீஸ் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் மலர்க்கொத்து அளித்து வரவேற்றார்.
பணியில் மீண்டும் இணைந்தது குறித்து 52 வயதாகும் உதவி ஆய்வாளர் அருணாசலம் கூறுகையில்,'எனது குடும்பத்திற்கு அடுத்தபடியாக என்னுடன் பணிபுரியும் காவலர்கள் என்னை நல்லபடியாக கவனித்துக் கொண்டனர். அடிக்கடி தொடர்பில் இருந்து எனது உடல் நிலை முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தனர். அவர்கள் காட்டிய அக்கறை எனக்கு உற்சாகத்தை அளித்தது' என்று தெரிவித்தார்.
சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் கூறுகையில்,'காவலர் அருணாசலம் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதேபோன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மற்ற காவலர்களும் விரைவில் குணம் அடைந்து பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கிறேன்' என்று கூறினார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து காவல் நிலையங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக தமிழக அளவில் மொத்தம் 320 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 276 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் ஆவர்.
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இணை ஆணையருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பரவுவதற்கு கோயம்பேடு மார்க்கெட் முக்கிய காரணம். மார்க்கெட் மூலமாகவும் பரவிய வைரஸால் சுமார் 2,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.