குறிப்பாக மலப்புரம் மாவட்டத்தில் இன்று 63 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஹைலைட்ஸ்
- கேரளாவில் தற்போது புதிதாக 272 பேருக்கு கொரோனா பாதிப்பு
- பாதித்தவர்களில் பெரும்பாலானோர் வெளி நாடுகளிலிருந்து வந்தவர்கள்
- 1.86 லட்சம் பேர் கேரளாவில் வீட்டுக் கண்காணிப்பில் இருக்கிறார்கள்
Thiruvananthapuram: கேரளாவில் இன்று புதிதாக 272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
கேரளாவில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5,894 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் 1.86 லட்சம் பேர் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.
புதிய பாதிப்பில் 157 பேர் வெளிநாடுகள் மற்றும் மற்ற 38 மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வந்தவர்கள் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
68 பேருக்கு கொரோனா பாதித்தவர்களில் இருந்து தொற்று பரவியுள்ளது. 15 பேருக்கு எப்படி ஏற்பட்டது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த 66 பேர் மற்றும் ராணுவத்தை சேர்ந்த 23 வீரர்கள் ஆகியோருக்கு கேரளாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக மலப்புரம் மாவட்டத்தில் இன்று 63 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருவனந்தபுரம் 54, பாலக்காடு 29, எர்ணாக்குளம் 21, கண்ணூர் 19, ஆலப்புழா 18, கோழிக்கோடு 15, காசர்கோடு 13, பத்தனம் திட்டா 12, கொல்லம் 11, கோட்டயம் மற்றும் வயநாடு ஆகியவற்றில் தலா 3, இடுக்கியில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 7,516 மாதிரிகள் சோதிக்கப்பட்டன. மொத்தம் 1.86 லட்சம்பேர் கண்காணிப்பில் இருக்கிறார்கள். இன்று அனுமதிக்கப்பட்ட 318 பேருடன் மொத்தம் 3,034 பேர் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
World
67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.
India
4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.
State & District Details