Read in English
This Article is From Mar 29, 2020

பீகார், உ.பிக்கு திருப்பும் தொழிலாளர்களுக்கு தயாராகும் கட்டாய தனிமைப்படுத்தல் முகாம்

ஆனால், சமீபத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், “இடம் பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு பேருந்து வசதியினை ஏற்படுத்துவதென்பது நோய்த் தொற்றினை அதிகரிக்க வழிகோலும் என்றும், இடம் பெயர் தொழிலாளர்கள் தற்போது இருக்கும் மாநிலங்களிலேயே தங்க வைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் வழங்கும் என்றும் என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்

Advertisement
இந்தியா Posted by

21 நாட்கள் முடக்க நடவடிக்கையையொட்டி ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பீகார் திரும்பியுள்ளனர்.

Lucknow/ New Delhi/ Patna:

தேசிய அளவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பிரதமர் 21 நாட்கள் முடக்க நடவடிக்கையை அறிவித்திருந்தார். இதன் காரணமாக அனைத்து தனியார் நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள், மற்றும் பொது போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டன. இந்த நிலையில் வட மாநிலங்களில் ஆயிரக்கணக்கான அன்றாட தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்குக் கடந்த சில நாட்களாக நடந்தே வந்துகொண்டிருந்தனர். பல நூறு மைல்களை அவர்கள் நடந்தே கடக்க முயன்றுகொண்டிருந்தனர். இந்த செய்தியானது பரவலாக பரவியதையடுத்து உத்தரப்பிரதேச மற்றும் பீகார் மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களைச் சார்ந்த தொழிலாளர்களை அழைத்துவர 500 சிறப்புப் பேருந்துகளை அனுப்பியிருக்கிறது.

 இந்த நிலையில் சிறப்புப் பேருந்தில் வரும் அத்துணை பேரும் 14 நாட்கள் சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் கட்டாயமாகத் தங்கவைக்கப்படுவார்கள் என்று அந்தந்த மாநில  அரசுகள் குறிப்பிட்டுள்ளன. மேலும், அவர்களுக்குத் தேவையான அத்துணை அத்தியாவசிய உதவிகளையும் அரசு உறுதி செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

1.5 லட்சத்திற்கும் அதிகமாகக் கடந்த மூன்று நாட்களில் உத்தரப்பிரதேசம் வந்தடைந்த இடம் பெயர் தொழிலாளர் அடையாளம் காணப்பட்டு மாநில அரசு நடத்து மருத்துவ முகாம்களில் தங்கவைக்க அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு மாநில அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருக்கிறார். அவர்களுடைய தொடர்பு எண்கள் மற்றும் முகவரிகள் கிடைத்திருக்கிறது என்றும், அவர்கள் கண்காணிக்கப்படுகின்றார்கள் என்றும் மாநில அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இடம் பெயர் தொழிலாளர்கள் மாநில அரசின் முகாம்களில் கட்டாயமாக 14 நாட்கள் தங்கவைக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் கிராமத்திற்குச் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றும் உ.பி மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மயூர்யா தெரிவித்திருக்கிறார். மேலும், அவர்களைக் கண்டறிய பேரிடர் மேலாண்மை சம்பந்தப்பட்ட நோடல் அதிகாரிகள் இடம் பெயர் தொழிலாளர்களின் பட்டியல் தயாரிக்கும் பணியினை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

 ஆனால், உ.பியின் கிழக்கு மாவட்டமான தியோரியா மாவட்டத்தையடைந்த தொழிலாளர்கள் தெர்மல் ஸ்கேன் செய்யப்பட்டு தங்கள் கிராமங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். நோய்த்தொற்று உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மட்டுமே மருத்து முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், நேற்றைய இரவு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் எவரும் முகாமுக்கு அனுப்பப்படவில்லை.

இதே போல பீகார் மாநிலத்திலும் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், மாநிலத்திற்கு திரும்பும் இடம் பெயர் தொழிலாளர்கள் கட்டாயமாக 14 நாட்கள் மருத்துவ முகாமில் தங்க வைக்கப்பட்ட பிறகே அவர்கள் தங்களது சொந்த கிராமத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், சமீபத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், “இடம் பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு பேருந்து வசதியினை ஏற்படுத்துவதென்பது நோய்த் தொற்றினை அதிகரிக்க வழிகோலும் என்றும், இடம் பெயர் தொழிலாளர்கள் தற்போது இருக்கும் மாநிலங்களிலேயே தங்க வைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் வழங்கும் என்றும் என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்த நடவடிக்கையானது பிரதமரின் அறிவிப்புக்கு எதிர்மறையான விளைவுகளைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றுக்கு 900க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் மேலும், 19 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். சர்வதேச அளவில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த நோய்த் தொற்றினால் இறந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது கோரோனா வைரஸ்-2 அல்லது, SARS-CoV-2 என அழைக்கப்படுகிறது. இது நெரிசலான இடங்களில் அதிகமாகப் பரவுகிறது. எனவே இதைக் கட்டுப்படுத்த சமூக விலகியிருத்தலே சரியான தீர்வு என்று பல நிபுணர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Advertisement