This Article is From May 14, 2020

பெட்டியில் தூங்கும் சிறுவன்: இழுத்துச்செல்லும் தாய்; தொடரும் புலம்பெயர் தொழிலாளர்கள் துயரம்!

இந்த குழுவினர், பஞ்சாபில் இருந்து நடக்க தொடங்கியுள்ளனர். தொடர்ந்து 800கி.மீ தொலைவில் உள்ள ஜான்சி நோக்கி அவர்கள் சென்றுகொண்டு இருக்கின்றனர்.

பெட்டியில் தூங்கும் சிறுவன்: இழுத்துச்செல்லும் தாய்; தொடரும் புலம்பெயர் தொழிலாளர்கள் துயரம்!

பெட்டியில் அமர்ந்து தூங்கும் சிறுவனை அவனது தாயார் பெட்டியுடன் இழுத்துச்செல்கிறார்.

ஹைலைட்ஸ்

  • பெட்டியில் தூங்கும் சிறுவன்: இழுத்துச்செல்லும் தாய்
  • தொடரும் புலம்பெயர் தொழிலாளர்கள் துயரம்
  • தொடர்ந்து 800கி.மீ தொலைவில் உள்ள ஜான்சி நோக்கி நடந்து செல்கின்றனர்
New Delhi:

நீண்ட தூரத்திற்கு நடந்து சென்ற சிறுவன் அதற்கு மேல் நடக்க முடியாமல், பெட்டியில் அமர்ந்து தூங்குகிறான். அவனது தாயார் அந்தப் பெட்டியை இழுத்துச் செல்கிறார். இப்போது, அந்த பெண்மணிக்கு இழுத்துச் செல்லும் சுமையானது மேலும் அதிகமாகும். பெட்டியையும், அதன் மேல் அமர்ந்து தூங்கிகொண்டு வரும் தனது பையனையும் அவர் இழுத்துச் செல்ல வேண்டும். இப்படி ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் தற்போது வரை புலம்பெயர் தொழிலாளர்களின் துயரம் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது.

இதுதொடர்பாக செய்தியாளர் ஒருவர் நடந்து செல்லும் அந்த பெண்ணிடம் பேசுகிறார். அப்போது, அவர் ஜான்சிக்கு செல்வதாக கூறுகிறார். தொடர்ந்து, அவரிடம் ஏன் மாநில அரசு ஏற்பாடு செய்யும் பேருந்துகளில் செல்லவில்லையா என கேள்வி எழுப்புகிறார். அதற்கு அவர் எந்த பதிலும் தெரிவிக்காமல், தனது குழுவினருடன் தொடர்ந்து, வேகமாக நடந்து செல்கிறார். 

இந்த குழுவினர், பஞ்சாபில் இருந்து நடக்க தொடங்கியுள்ளனர். தொடர்ந்து 800கி.மீ தொலைவில் உள்ள ஜான்சி நோக்கி அவர்கள் சென்றுகொண்டு இருக்கின்றனர். 


கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச்.25ம் தேதி நாடு முழுவதும் முதல்கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையில்லாமல், உணவில்லாமல், தங்குவதற்கு இடமில்லாமல் தவித்தனர். ரயில், பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகளும் இல்லாததால், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வழியில்லாமல், நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்தே செல்ல நிர்பந்திக்கப்பட்டனர். சமீபத்தில் வந்த இந்த புகைப்படங்கள், மற்றும் வீடியோ காட்சிகள் புலம்பெயர் தொழிலாளர்களின் சொல்ல முடியாத துயரத்தை விளக்குகிறது.

qbat2e48

மத்திய பிரதேசத்தில் இருந்து சைக்கிளில் குழந்தைகளை வைத்துக்கொண்டு சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள். 

இதில், பல தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் சென்றடைவதற்கு முன்பு பசியிலும், விபத்துகளிலும் உயிரிழந்து வருகின்றனர். 

சமீபத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரயில்களும், பேருந்துகளும் ஏற்கனவே, நடக்க துவங்கியவர்களுக்கு எந்த வகையிலும் உதவவில்லை. பலர் ரயில் கட்டணங்கள் அதிகமாக இருப்பதாக உணர்கிறார்கள். 

ஊரடங்கு காரணமாக தாங்கள் பணிபுரிந்து வந்த செங்கல் தொழிற்சாலை முடங்கியதால், புலம்பெயர் தொழிலாளர்கள் இந்தூரில் இருந்து மத்திய பிரதேசத்திற்கு ஒரு குழுவாக நடக்க துவங்கினர். சிலர் சைக்கிள்களில் குழந்தைகளை அமர வைத்து அழைத்துச்செல்கின்றனர்.

.