This Article is From Apr 06, 2020

நெருக்கடியில் விமான நிறுவனங்கள்: லாக் டவுனுக்கு பிறகு விமானங்கள் இயக்கப்படலாம்!

தனியார் மற்றும் பொது போக்குவரத்துகள் முற்றிலுமாக முடக்கப்பட்டன. விமான போக்குவரத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான சேவையும் நிறுத்தப்பட்டது. இதனால் விமான போக்குவரத்து துறை கடும் நெருக்கடியினை சந்தித்து வருகின்றது

நெருக்கடியில் விமான நிறுவனங்கள்: லாக் டவுனுக்கு பிறகு விமானங்கள் இயக்கப்படலாம்!

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் விமானத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • India imposed a 21-day lockdown from March 25
  • Aviation sector has been hit hard by the coronavirus pandemic
  • On Sunday, Air Deccan became the latest casualty of the crisis
New Delhi:

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பல நாடுகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்திருக்கக்கூடிய நிலையில் இந்தியா முன்னெச்சரிக்கையாக முழு முடக்க நடவடிக்கையை நாடு முழுவதும் அமல்படுத்தியது. இதனால் தனியார் மற்றும் பொது போக்குவரத்துகள் முற்றிலுமாக முடக்கப்பட்டன. விமான போக்குவரத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான சேவையும் நிறுத்தப்பட்டது. இதனால் விமான போக்குவரத்து துறை கடும் நெருக்கடியினை சந்தித்து வருகின்றது.

இந்த நிலையில் 21 நாட்களுக்கு பிறகு, அதாவது ஏப்ரல் 14 க்கு பிறகு விமான போக்குவரத்து தொடங்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெக்கான் ஏர் நிறுவனம் நெருக்கடி காரணமாக தனது ஊழியர்களை சம்பளமின்றி விடுப்பு எடுத்துக்கொள்ளக் கேட்டுக்கொண்டது.

கொரோனா தொற்றின் பரவல் இந்தியாவில் நீடித்துவரக்கூடிய நிலையில், சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்தினை ஏப்ரல் 14 க்கு பிறகு தொடங்க நாங்கள் ஆலோசித்து வருகிறோம் என்றும், விமான நிறுவனங்கள் ஏப்ரல் 14க்கு பிறகு தங்களுடைய முன்பதிவினை தொடங்கலாம் என்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஒருவேளை அரசு இந்த முழு முடக்க நடவடிக்கை ஏப்ரல் 14க்கு பிறகும் நீடிக்குமானால், விமான நிறுவனங்கள் முன் பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது ஏர் இந்தியா நிறுவனம் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் ஏப்ரல் 14 க்கு பிறகு பயணிகள் விமான முன்பதிவுகளை செய்ய அனுமதித்துள்ளது. ஆனால், ஏர் இந்தியா நிறுவனம் முன்பதிவுகளை ஏப்ரல் 30க்கு பிறகே தொடங்க இருக்கின்றது. ஏர் டெக்கான் நிறுவனம் தனது ஊழியர்களை சம்பளமின்றி கட்டாய விடுப்பு கொடுத்துள்ளதால் முன்பதிவினை தொடங்கவில்லை. மீண்டும் எப்போது முன்பதிவினை தொடங்கும் என்கிற விவரங்கள் தெரிவிக்கவில்லை.

விமான போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டிருப்பதால், வருவாய் பெரிய அளவில் பாதிப்பை குறைந்துள்ளது. இந்த நிலையில் இன்டிகோ நிறுவனம் தனது மூத்த அதிகாரிகளுக்கு 25 சதவிகிதம் வரை ஊதிய குறைப்பினை அறிவித்துள்ளது. விஸ்டாரா நிறுவனம் மார்ச் மாதத்தில் தனது மூத்த ஊழியர்களுக்கு மூன்று நாட்கள் வரை ஊதியம் இன்றி கட்டாய விடுப்பை அறிவித்துள்ளது. இதே போல ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 10 முதல் 30 சதவிகிதம் வரை ஊதிய குறைப்பினை அறிவித்துள்ளது.

மேலும், ஏர் இந்தியா நிறுவனம் கேபின் குழுவினரைத்தவிர மற்ற ஊழியர்களுக்கு 10 சதவிகிதம் வரை ஊதியத்தினை குறைப்பதாக அறிவித்துள்ளது. கோ ஏர் நிறுவனம் தனது ஊழியர்களின் சம்பளத்தை குறைத்து, தன் நிறுவனத்தின் வெளிநாட்டு விமானிகளை பணிநீக்கம் செய்து, சுழற்சி அடிப்படையில் ஊழியர்களுக்கு ஊதியம் இல்லாமல் விடுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

விமான போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ள இந்த காலகட்டங்களில் சரக்கு விமானங்கள், கடல் ஹெலிகாப்டர்கள், மருத்துவ விமானங்கள் மற்றும் இந்திய விமான ஒழுங்குமுறை இயக்குநர் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டிஜிசிஏ) அனுமதித்த சிறப்பு விமானங்கள் இந்த முழு முடக்க நடவடிக்கையின் போது இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

.