Read in English
This Article is From May 25, 2020

நோயுற்ற தாயை பார்க்க துபாயிலிருந்து வந்த நபர்! குவாரன்டைனில் இருந்தபோது தாய் மரணம்

மார்ச் மாதத்திலேயே இந்தியாவுக்கு வந்து ஒரு மாதத்தை தனது தாயுடன் கழிக்க ஆமிர் கான் திட்டமிட்டிருந்தார். அவரது தாய்க்கு கடந்த நவம்பரில் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 

Advertisement
இந்தியா

ஆமிர்கான் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பியுள்ளார்.

Highlights

  • நோயுற்ற தாயை பார்க்க துபாயிலிருந்து 30 வயது இளைஞர் டெல்லி வந்தார்
  • இளைஞர் குவாரண்டைனில் இருந்தபோது தாயார் உயிர் பிரிந்தது
  • தாயின் இறுதிச் சடங்கில் கூட இளைஞரால் பங்கேற்க முடியவில்லை
New Delhi:

தனது நோயுற்ற தாயை பார்க்க துபாயில் இருந்து இளைஞர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு இந்தியா திரும்பினார். அவர் குவாரன்டைனில் இருந்தபோது அவரது தாயார் உயிர் பிரிந்துள்ளது. அவரது இறுதி சடங்கிலும் கூட பங்கேற்க முடியாத நிலைக்கு மகன் ஆளானார்.

டெல்லி ராம்பூரை சேர்ந்த ஆமிர் கான் என்ற 30 வயது இளைஞர் துபாயில் பணி புரிந்து வந்தார். இதற்கிடையே அவரது தாய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

இதனை கேள்விப்பட்ட ஆமிர்கான் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பியுள்ளார். வெளிநாட்டிலிருந்து வந்தவர் என்பதால் அவரை அதிகாரிகள் குவாரன்டைன் செய்துள்ளனர். ஆமிர்கான் கடந்த 13-ம்தேதி இந்திய வந்துள்ளார். 

Advertisement

இந்த நிலையில் ஆமிர்கான் குவாரன்டைனில் இருந்தபோது நேற்று முன்தினம் அவரது தாயாரின் உயிர் பிரிந்தது. 

ஞாயிறன்று குவாரன்டன் விதிகளை அரசு மாற்றியமைத்தது. அதாவது, 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை 7 நாட்கள் அரசு மூலமாகவும், மற்ற 7 நாட்களை வீட்டிலும் மேற்கொள்ள வேண்டும் என்று மாற்றம் செய்யப்பட்டது. இதுதொடர்பான செய்திகளையும் ஆமிர்கான் அதிகாரிகளிடம் அளித்துள்ளார். ஆனால் இதை அவர்கள் பொருட்படுத்தவில்லை என்று ஆமிர் குற்றம்சாட்டியுள்ளார். 

Advertisement

முன்னதாக மார்ச் மாதத்திலேயே இந்தியாவுக்கு வந்து ஒரு மாதத்தை தனது தாயுடன் கழிக்க ஆமிர் கான் திட்டமிட்டிருந்தார். அவரது தாய்க்கு கடந்த நவம்பரில் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 

இந்த சம்பவம் குறித்து ஆமிர்கான் கூறுகையில், 'நாங்கள் கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்வோம். ஆனால், அதனால் ஏற்படும் உணர்ச்சி இழப்புகள் என்றென்றும் நம்மை விட்டு நீங்காது. கடந்த 2 மாதங்களாக நான் என் தாயை பார்க்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில்தான் இருந்தேன். இதற்காக நான் பலவற்றை இழந்தேன்.

Advertisement

பலகட்டமாக தூதரக முயற்சிகளை தொடர்ந்து நான் இந்தியாவுக்கு மே 13-ல் வந்தேன். 7 நாட்களுக்கு பின்னர் 8-வது நாளை தாயை சந்திப்பேன் என்ற எதிர்பார்ப்பில் இருந்தேன். 

 நான் என் அம்மாவைச் சந்திக்கச் செல்ல வேண்டும் என்று எஸ்.டி.எம் அலுவலகத்தின் பிரதிநிதிகளிடம் சொன்னேன். அவர்கள் சிறப்பு அனுமதி எடுக்க வேண்டும் என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள். இன்னும் பல நாட்கள் சென்றன, என் அம்மா காலமானார் என்று எனக்கு அழைப்பு வந்தது. நான். கடைசி சடங்குகளுக்கு என்னை அனுமதிக்குமாறு அதிகாரிகளிடம் மன்றாடினார், ஆனால் நான் அனுமதிக்கப்படவில்லை' என்று கூறியுள்ளார். 

Advertisement