This Article is From Aug 01, 2020

கொரோனாவில் இருந்து மீண்டு வந்த 100 வயது மூதாட்டி அவரது வீட்டில் உயிரிழந்தார்!

அவர் சிகிச்சை பெற்ற போதும்,  திரவ உணவையே உட்கொண்டார். அவரால் நடமாட முடியாமல் சென்ற நிலையில், இன்று அவர் வீட்டிலே உயிரிழந்ததாக கூறினார்.

கொரோனாவில் இருந்து மீண்டு வந்த 100 வயது மூதாட்டி அவரது வீட்டில் உயிரிழந்தார்!

கொரோனாவில் இருந்து மீண்டு வந்த 100 வயது மூதாட்டி அவரது வீட்டில் உயிரிழந்தார்!. (Representational)

Pune:

புனேவில் கொரோனா இருந்து மீண்டு வந்த 100 வயது மூதாட்டி, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய 3 நாட்களில் உயிரிழந்துள்ளார். 

மூதாட்டியுடன், புனேவில் உள்ள அவரது குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஜூலை.20ம் தேதி அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து, ஜூலை 28ம் தேதி வைரஸ் தொற்று பாதிப்பு குணமடைந்ததை தொடர்ந்து, மூதாட்டி மற்றும் இதர குடும்பத்தினர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 

இதுதொடர்பாக மூதாட்டியின் மருமகன் கூறும்போது, திட உணவை உட்கொள்வதை கிட்டத்தட்ட அவர் நிறுத்திவிட்டதாகவும், பெரும்பாலும் திரவ உணவை மட்டுமே எடுத்துக்கொண்டதாக அவர் கூறினார்.

அவர் சிகிச்சை பெற்ற போதும்,  திரவ உணவையே உட்கொண்டார். அவரால் நடமாட முடியாமல் சென்ற நிலையில், இன்று அவர் வீட்டிலே உயிரிழந்ததாக கூறினார்.

புனே மாநகராட்சியை சேர்ந்த மருத்துவர்கள் கூறும்போது, அந்த மூதாட்டியை கொரோனா மையத்திற்கு கொண்டு வரப்பட்டபோது, அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் அவரது ஆக்ஸிஜன் செறிவு இயல்பாக இருந்ததாகவும் அவர்கள் கூறினர். 

ஆனால், அடுத்த ஓரிரு நாட்களில், அந்த மூதாட்டியின் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால், அவரை பெரிய மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

"எனினும், சில காரணங்களால், அந்த மருத்துவமனை அவரை அனுமதிக்கவில்லை. பின்னர் அவர் மீண்டும் கொரோனா பராமரிப்பு மையத்திற்கு அழைத்து வரப்பட்டார், அங்கு அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அவரது உடல்நிலையும் சீராகிவிட்டது" என்று தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் ராம்சந்திர ஹங்கரே  கூறினார். 

.