This Article is From Jun 01, 2020

சிறப்பு ரயிலில் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளி; சடலத்துடன் 8 மணி நேரம் பயணித்த சக பயணிகள்!

புத்தா பாரிகர் (50), மால்டா மாவட்டத்தில் உள்ள ஹரிஷ்சந்தராப்பூரை சேர்ந்த இவர், ராஜஸ்தானில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

சிறப்பு ரயிலில் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளி; சடலத்துடன் 8 மணி நேரம் பயணித்த சக பயணிகள்!

சிறப்பு ரயிலில் உயரிழந்த புலம்பெயர் தொழிலாளி; சடலத்துடன் 8 மணி நேரம் பயணித்த சக பயணிகள்!. (Representational)

Malda:

ராஜஸ்தானில் இருந்து மேற்கு வங்கத்திற்கு செல்லும் ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து, சுமார் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக உயிரிழந்தவரின் சடலத்துடன் பயணித்தது மற்ற பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

புத்தா பாரிகர் (50), மால்டா மாவட்டத்தில் உள்ள ஹரிஷ்சந்தராப்பூரை சேர்ந்த இவர், ராஜஸ்தானில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அவரது மைத்துனரான சாராஜூ தாஸ் என்பவரும் அதே உணவகத்தில் பரிகாருடன் பணியாற்றி வந்துள்ளார். கிட்டத்தட்ட 20 வருடங்களாக ராஷஸ்தானில் பணிபுரிந்து வரும் பரிகாருக்கு, மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இதனிடையே, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், பாரிகரும், தாஸூம் வேலையிழந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் சொந்த ஊரான மால்டா திரும்புவதற்கு அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துள்ளனர். எனினும் முடியவில்லை, அவர் கையில் இருந்த பணமும் தீர்ந்துள்ளது. 

இதையடுத்து, ஒரு வழியாக ஷ்ராமிக் ரயிலில் அவர்கள் கடந்த 29ம் தேதி தங்களது சொந்த ஊர் செல்வதற்கான பயணத்தை தொடங்கியுள்ளனர். இதனிடையே, சனிக்கிழமை இரவு 10 மணி அளவில் உத்தர பிரதேசம் அருகே சென்ற போது ரயிலிலே பாரிகர் திடீரென உயிரிழந்துள்ளார். 

இதையடுத்து, பரிகாரின் மரணம் அந்த பெட்டியில் இருந்தவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொரோனா வைரஸால் தான் உயிரிழந்துள்ளார் என நினைத்து தங்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடும் என எண்ணி சக பயணிகள் அனைவரும் அச்சமடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, காலை 6.40 மணியளவில் மால்டா ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தடைந்ததும், ரயில்வே டாக்டர்கள் மற்றும் இதர ஊழியர்கள் அங்கு விரைந்துள்ளனர். பின்னர் ரயில்வே போலீசாரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, பாரிகர் டிபி நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். பயணத்தின் போது, அவருக்கான மருந்துகளும் கொடுக்கப்பட்டுள்ளன. எனினும், அவர் உயிரிழந்துள்ளார். 

இதன் பின்னர் இந்த விவகாரம் இங்கலீஷ் பஜார் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர். மால்டா மருத்துவக்கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக பாரிக்கரின் உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். 

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
.